ராசி பலன்(18-06-2025)
மேஷம்:
சிலருக்கு அலுவலகத்தில் மன கசப்புகள் உண்டாகும். வீடு மற்றும் நிலம் வாங்கும் திட்டம் நிறைவேறும். மின்சார தொடர்பான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.
ரிஷபம்:
எதிர்காலம் பற்றிய கவலையும் பயமும் உண்டாகும். காதல் விவகாரத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நன்மையான நாள்.
மிதுனம்:
இன்று உங்களால் உங்கள் குடும்பத்தினர் மனசங்கடத்திற்கு ஆளாவார்கள். எதையும் தீர ஆலோசித்து செய்வதால் பிரச்சனைகளை தவிர்க்கலாம். சொந்தங்கள் விலகி செல்லும் காலம் ஆகும்.
கடகம்:
காதல் வாழ்க்கை இனிமையாக அமையும். குடும்பத்தில் சில சங்கடங்கள் தோன்றி மறையும். உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். பணம் தொடர்பான விஷயங்களில் கவனமாக தேவை.
சிம்மம்:
இன்று நீங்கள் எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் கைக்கு வரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த தகவல் உங்களை வந்து சேரும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும்.
கன்னி:
உங்கள் உடல்நிலையில் சில சங்கடங்கள் தோன்றி மறையும். மதியம் மேல் உங்கள் வீட்டில் சில சண்டைகளை சந்திப்பீர்கள். அவமானத்தை சந்திக்கும் நாள். இறைவழிபாடு நன்மை அளிக்கும்.
துலாம்:
பல நாள் கனவு நிறைவேறும். மனதிற்கு பிடித்த காரியத்தை செய்து மகிழ்வீர்கள். வியாபாரத்தில் உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகி செல்வார்கள். நண்பர்கள் வட்டம் விரிவடையும்.
விருச்சிகம்:
இன்று மன சோர்வு உண்டாகும். வெளிநபரால் குடும்பத்தில் பிரிவு உண்டாகும். மனதிற்கு பிடித்தவர்களிடம் மனம் விட்டு பேசுவீர்கள். சொந்தங்கள் பற்றிய உண்மை முகம் வெளிப்படும்.
தனுசு:
நீண்ட நாட்காளாக காத்திருந்த விஷயம் நடக்கப்போகிறது. குடும்பத்துடன் குலதெய்வ வழிபாடு செய்வீர்கள்.விலகி சென்ற சொந்தம் உங்களை மீண்டும் தேடி வருவார்கள்.
மகரம்:
காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும். பெற்றோர்கள் உங்களை புரிந்து நடந்து கொள்வார்கள். திடீர் வெளியூர் பயணம் ஆதாயத்தை கொடுக்கும். கடன் வாங்குவதை தவிர்க்கவும்.
கும்பம்:
திருமண வரன் தேடி வரும். குடும்பத்துடன் நேரத்தை செலவு செய்வீர்கள். நீண்ட நாளாக கைக்கு வராத பணம் கைகளுக்கு வரும். முக்கிய நபரின் சந்திப்பு நன்மை தரும்.
மீனம்:
இன்று உங்கள் வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பங்களை சந்திப்பீர்கள். வீட்டிற்கு உறவினர்கள் வருகையால் நன்மை உண்டாகும். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய கவலை விலகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |