இன்றைய ராசி பலன்(10-10-2025)
மேஷம்:
இன்று விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மதியம் மேல் தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். வேலை காரணமாக தொலை தூர பயணம் மேற்கொள்ள வாய்ப்புகள் உள்ளது.
ரிஷபம்:
குடும்பத்தின் பொறுப்புகளை ஏற்கக் கூடிய நாள். ஒரு சிலருக்கு கால்களில் ஒரு சில வலி உண்டாகும். வேலையில் உங்களுக்கான மதிப்பு உயரக்கூடிய நாள். அலைச்சல் அதிகமாகலாம்.
மிதுனம்:
குடும்பத்தில் சிறுசிறு விவாதங்களைத் தவிர்ப்பது நன்மை தரும். மனதில் இனம் புரியாத குழப்பங்கள் உருவாகும். பூர்வீக சொத்துகளில் ஏற்பட்ட பிரச்சனைகள் விலகும்.
கடகம்:
நீங்கள் எதிர்பார்த்து காத்திருந்த சில முக்கியமான காரியங்கள் கைகூடிவரும். சமுதாயத்தில் உங்களுக்கான மதிப்பு உயரும். உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள்.
சிம்மம்:
இன்று நீங்கள் முடிவெடுக்கும் பொழுது மிக கவனமாக முடிவெடுக்க வேண்டும். புனித தலங்களுக்கு சென்று ஒரு சில முக்கிய வழிபாடும் மேற்கொள்வீர்கள். சிந்தனைகளில் கவனம் தேவை.
கன்னி:
குடும்பத்தில் வரவுக்கேற்ற செலவு செய்வது அவசியம். ஆடம்பர பொருட்களை வாங்கும் பொழுது கவனமாக இருங்கள். சுப காரிய பேச்சுக்கள் நல்ல முடிவைப் பெறும்.
துலாம்:
விலகி சென்றவர்கள் உங்களை மீண்டும் வந்து பேசுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. சிந்தனைகளில் கவனம் தேவை. உடல் சோர்வு உண்டாகலாம். மாலை மேல் நினைத்த காரியம் நிறைவேறும்.
விருச்சிகம்:
இன்று உங்கள் திறமைகளை வெளிப்படுத்தக்கூடிய அற்புதமான நாள். உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு நல்ல ஆதரவை கொடுப்பார்கள். வேலைப்பளு அதிகரிக்கும்.
தனுசு:
இன்று ஒரு சிலருக்கு பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கலாம். கொடுக்கல் வாங்கலில் உள்ள சிக்கல்கள் விலகும். வியாபாரத்தில் இருந்து நெருக்கடிகள் விலகி நன்மைகள் உண்டாகும்.
மகரம்:
இன்று எதிலும் மிகவும் கவனமாகவும் சிக்கனமாகவும் இருக்க வேண்டும. ஒரு சிலருக்கு குடும்பத்தினரை பற்றிய புரிதலும் குழப்பங்கள் உண்டாகலாம். பொழுதுபோக்கில் கவனம் செலுத்துவீர்கள்.
கும்பம்:
வீண் வாக்குவாதம் செய்வதை தவிர்த்து விடுங்கள். சக ஊழியர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். இறை சிந்தனை மனதில் அதிகரிக்கும். மனதில் தெளிவு உண்டாகும் நாள்.
மீனம்:
பழைய பிரச்சனைகளுக்கு நல்ல முடிவைப் பெறுவீர்கள். மறைமுக திறமைகள் வெளிப்படும். திட்டமிட்டு சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். மனதளவில் புதிய சிந்தனை உருவாகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







