இன்றைய ராசிபலன்(04-09-2025)

Report

 மேஷம்:

மேஷ ராசியினர் காலை முதல் சுற்று சோம்பேறியாக காணப்படுவார்கள். வேலை பளு அதிகரிக்கும். சொந்தங்கள் உங்களுக்கு ஆதரவு கொடுக்க தவறலாம். மன உளைச்சல் அதிகரிக்கும் நாள்.

ரிஷபம்:

இன்று உங்கள் வீடுகளில் சில சங்கடமான நிலை உண்டாகும். தாயாரிடம் மிக கவனமாக பேசுவது அவசியம். உங்கள் எண்ணங்களை அமைதியாகவும் தெளிவாகவும் வழிபடுத்துவது நல்லது.

மிதுனம்:

எதிர்காலம் பற்றிய பயம் வரும். வாழ்க்கையில் ஏதோ ஒரு காலகட்டத்தில் தவறு செய்துவிட்டதை எண்ணி வருந்துவீர்கள். காலம் கடந்து விட்டது என்று நினைக்காமல் பிரச்சனையை சரி செய்ய முயன்றால் நன்மை உண்டாகும்.

கடகம்:

இன்று உங்களுக்கு காலை முதல் தலைவலி ஏற்பட வாய்ப்புள்ளது. வீட்டிற்கு உறவினர்களுடைய வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். சகோதரனிடம் சற்று கவனமாக பேசுவது அவசியம்.

சிம்மம்:

இன்று உங்களுடைய ஆடம்பரத்தை குறைத்து கொள்ளுங்கள். முடிந்தவரை உங்களுடைய பேச்சுக்களில் கவனம் அவசியம். கடன் வாங்காமல் இருந்தால் பொருளாதார சிக்கல்களில் இருந்து தப்பிக்கலாம்.

கன்னி:

சகோதரர்களுக்கும் உங்களுக்கும் மனக்கசப்புகள் உண்டாகும். முடிந்தவரை வேளையில் சோம்பேறித்தனத்தை பார்க்காமல் செய்து விடுங்கள். தாய் உடல் ஆரோக்கியத்தில் சுற்று கவனம் அவசியம்.

துலாம்:

துலாம் ராசியினருக்கு இன்று மனதில் தெளிவும் நம்பிக்கையும் பெறக்கூடிய காலமாகும். வாழ்க்கையில் எது வேண்டும் வேண்டாம் என்று சரியான முடிவை எடுத்து பயணம் செய்வீர்கள்.

உங்கள் பெயர் S என்ற எழுத்தில் தொடங்குகிறதா? அப்போ உங்கள் குணநலன்கள் இதுதான்

உங்கள் பெயர் S என்ற எழுத்தில் தொடங்குகிறதா? அப்போ உங்கள் குணநலன்கள் இதுதான்

விருச்சிகம்:

யோகமான நாள். வியாபாரத்தில் புதிய உத்திகளைக் கையாள்வீர். உங்கள் முயற்சி வெற்றியாகும். வாடிக்கையாளர் அதிகரிப்பர். வருமானம் உயரும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.

தனுசு:

பிள்ளைகளும் உங்களுக்கும் கருத்து வேறுபாடுகள் வரலாம். செய்த தவறை நினைத்து மனம் வருந்துவீர்கள். உங்கள் குடும்பத்தில் சில மகிழ்ச்சியான செய்தி வந்து சேரும்.

மகரம்:

வியாபாரத்தில் போட்டியாளரால் ஏற்பட்ட சங்கடம் விலகும். புதிய வாடிக்கையாளரால் வருவாய் அதிகரிக்கும். எதிர்பாராதவிதமாக நண்பர்களின் உதவி கிடைக்கும். இழுபறியாக இருந்த பிரச்னை முடிவிற்கு வரும்.

கும்பம்:

ஆசிரியர் பணியில் இருப்பவர்களுக்கு சில சிக்கல் சந்திக்கலாம். பெற்றோர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். சிலர் இன்று வீண் வாக்கு வாதம் செய்து மாட்டிக்கொள்ளும் நிலை உருவாகும்.

மீனம்:

வம்பு வழக்குகளில் சிக்கி கொள்ளாமல் பார்த்து கொள்வது அவசியம். தேவை இல்லாத வார்த்தைகளை பயன் படுத்தி மாட்டிக்கொள்ளாதீர்கள். தொலைதூர பயணம் மேற்கொள்ளும் காலம் ஆகும்.       

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US