இன்றைய ராசி பலன் (09-09-2025)

Report

மேஷம்:

இன்று ஒரு சிலருக்கு குடும்பத்தில் எதிர்பாராத மனக்குழப்பங்கள் உண்டாகலாம். வெளியூர் செல்ல வேண்டும் என்று திட்டமிடுபவர்களுக்கு சில தாமதங்கள் உண்டாகலாம். கவனம் தேவை.

ரிஷபம்:

இன்று சிலருக்கு வயிற்றுப் பகுதிகளில் சில உபாதைகள் உண்டாகலாம். உணவு பழக்க வழக்கத்தில் கவனம் அவசியம். வேலையில் உங்களுக்கு எதிராக செயல்பட்டவர் விலகி செல்வார்.

மிதுனம்:

இன்று உங்கள் வேலையில் அச்சம் உண்டாகும். சிலர் வேலையை ராஜினாமா செய்யும் அளவிற்கு யோசனை செய்வார்கள். குடும்பத்திலும் சில பிரச்சனைகளை வரும் என்பதால் மன அழுத்தத்திலிருந்து காத்துக் கொள்வது அவசியம்.

கடகம்:

தேவையில்லாத பிரச்சனைகளை மனதில் போட்டு குழப்பிக் கொள்ளாமல் ஓய்வு எடுப்பது நன்மை தரும். கணவர் உங்களை புரிந்து நடந்து கொள்வார். இறைவழிபாடு நன்மை அளிக்கும்.

சிம்மம்:

இன்று முடிந்தவரை உங்களின் செல்வாக்கை பிறரிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நன்மை அளிக்கும். தாயிடம் சற்று கவனமாக உங்களுடைய ரகசியத்தை சொல்ல கொள்ள வேண்டும்.

கன்னி:

இன்று திருமண வாழ்க்கையில் நீங்கள் தவறாக சிந்தித்து முடிவெடுத்ததை நினைத்து வருந்துவீர்கள். சகோதர உறவுகளிடம் மிக கவனமாக பேசுவது அவசியம். சொத்து வழக்கு உங்களுக்கு எதிராக திரும்ப வாய்ப்புகள் உண்டு.

நண்பர்களுக்கு அதிக அளவில் முக்கியத்துவம் கொடுக்கும் 3 ராசிகள் யார் தெரியுமா?

நண்பர்களுக்கு அதிக அளவில் முக்கியத்துவம் கொடுக்கும் 3 ராசிகள் யார் தெரியுமா?

துலாம்:

அலுவலகத்தில் உங்களுடைய ஆலோசனைக்கு மதிப்பு அளிப்பார்கள். உடல் நிலையில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். இறைவழிபாட்டில் முழு கவனத்தை செலுத்துவீர்கள். நன்மையான நாள்.

விருச்சிகம்:

இன்று உங்கள் கோபத்தை குறைத்து கொண்டால் மட்டுமே மனதில் மகிழ்ச்சி உண்டாகும். தேவை இல்லாமல் பிறரிடம் வாக்கு வாதம் செய்யாதீர்கள். கணவர் வீட்டார் உங்களுக்கு எதிராக செயல்பட வாய்ப்புகள் உண்டு.

தனுசு:

இன்று உங்கள் குடும்பத்தில் உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகி செல்வார்கள். பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்த வேண்டிய நாள். உறவினர்கள் வருகையால் நன்மை உண்டாகும்.

மகரம்:

இன்று உங்களின் நண்பர்களை சந்திப்பீர்கள். சம்பள உயர்வு பெரும் நாள். சிலருக்கு மூன்றாம் நபரால் சில தொந்தரவுகள் வரலாம். உணவு விஷயங்களில் கவனம் தேவை. கண் தொடர்பான சிக்கல்களை சந்திக்கலாம்.

கும்பம்:

திட்டமிட்டிருந்த வேலைகளை திட்டமிட்டபடி நடக்கும். வரவேண்டிய பணம் வரும். பொருளாதார நிலை உயரும். செல்வாக்கு உயரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

மீனம்:

மதியம் மேல் சிலரின் உண்மை முகத்தை தெரிந்து கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் சந்திப்பீர்கள். நண்பர்கள் உதவியால் சில நன்மைகள் உண்டாகும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US