நாளைய ராசி பலன்(23-07-2025)

Report

மேஷம்:

இன்று புதிய இடங்களை சுற்றி பார்க்கும் வாய்ப்புகள் கிடைக்கும். சமுதாய சேவைகளில் ஈடுபாடு செலுத்துவீர்கள். குடும்பத்தினர் முழு ஆதரவு கிடைக்கும். நன்மையான நாள்.

ரிஷபம்:

குடும்பத்தில் மகிழ்ச்சியான மாற்றங்களை சந்திப்பீர்கள். உடல் நிலையில் அக்கறை செலுத்த வேண்டிய நாள். நண்பர்களுடன் சுற்றுலா பயணம் செய்ய ஏற்பாடுகள் செய்வீர்கள்.

மிதுனம்:

இன்று பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றமும் மாற்றங்களும் கிடைக்கும். வியாபாரத்தில் சந்தித்த சிக்கல்கள் விலகி செல்லும். வேலைக்காக வெளியூர் பயணம் செல்ல நேரலாம்.

கடகம்:

இன்று உங்களுக்கு மகிழ்ச்சியான செய்திகள் தேடி வரும். பிள்ளைகளுடன் உங்கள் நேரத்தை செலவு செய்வீர்கள். கடன் அடைக்கும் வாய்ப்புகள் வரும். சமுதாயத்தில் நற்பெயர் பெறுவீர்கள்.

சிம்மம்:

இன்று முடிந்த வரையில் தேவை இல்லாத வாக்கு வாதம் செய்வதை தவிர்க்க வேண்டும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். சிறுவயது நட்புகளை சந்திப்பதால் மனதில் உற்சாகம் உண்டாகும்.

கன்னி:

நீண்ட நாட்களுக்கு பிறகு குடும்ப உறுப்பினர்களை சந்திப்பீர்கள். இறைவழிபாடு மனதில் அமைதியும் மகிழ்ச்சியும் கொடுக்கும். இன்று உங்கள் நலனுக்காக சில விஷயங்களை செய்துக் கொள்வீர்கள்.

துலாம்:

இன்று மனதில் தெளிவு உண்டாகும் நாள். குடும்பத்தில் ஏற்பட்ட சிக்கல் விலகி செல்லும். மாணவர்களுக்கு திறமை வெளிப்படுத்த பொன்னான வாய்ப்புகள் தேடி வரும்.

சிவன் கோயில் கட்டும் அதிர்ஷ்டம் உடைய ராசிகள் யார் தெரியுமா?

சிவன் கோயில் கட்டும் அதிர்ஷ்டம் உடைய ராசிகள் யார் தெரியுமா?

விருச்சிகம்:

தாய், தந்தை உடல் நிலையில் நல்ல மாற்றத்தை சந்திப்பீர்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் இடையே உங்கள் மகிழ்ச்சியான நேரத்தை செலவு செய்வீர்கள். உங்கள் கஷ்டகாலம் முடிவிற்கு வரும்.

தனுசு:

உணவு பழக்கத்தில் கவனம் தேவை. பிரிந்த சொந்தங்கள் உங்களிடம் பேசுவார்கள். பொருளாதாரத்தில் நல்ல மாற்றமும் மகிழ்ச்சியும் கிடைக்கும். வெளியூர் பயணம் செல்ல வாய்ப்புகள் இருக்கிறது.

மகரம்:

இன்று முகம் தெரியாத நண்பர்களிடம் உங்களுக்கு உதவியும் ஆதரவும் கிடைக்கும். தொழில் செய்பவர்கள் வியாபாரத்தில் நல்ல வருமானத்தை பெறலாம். பெரியவர்களின் ஆதரவு கிடைக்கும்.

கும்பம்:

இன்று உணவு பழக்கத்தில் கட்டாயம் கட்டுப்பாடு அவசியம். நண்பர்களுடன் தொலைத்தூர பயணம் செல்ல நேரலாம். உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு ஆதரவு அளிப்பார்கள்.

மீனம்:

இன்று உடல் நிலையில் நல்ல மாற்றம் உண்டாகும். தொழிலில் சந்தித்த சிக்கல்கள் விலகும். சமுதாயத்தில் உங்களுக்கான நற்பெயர் கிடைக்கும். உங்களை புரிந்துக் கொண்டு செயல்படுவார்கள்.

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US