குரு- கேதுவால் பணமழையில் மிதக்கப் போகும் ராசிகள்
வருடத்திற்கு ஒருமுறை தன்னுடைய இடத்தை மாற்றக்கூடிய குருபகவான், ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான செல்வ செழிப்பும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
இதனால் அனைத்து ராசிகளிலும் தாக்கம் ஏற்படும், வருகிற ஒன்றாம் திகதி ரிஷப ராசிக்கு மாறுகிறார் குரு பகவான்.
இதேசமயம் கேது பகவான் கன்னி ராசியில் பயணம் செய்து வரும் சூழலில் நவபஞ்ச யோகம் உருவாகியுள்ளது.
இதன் காரணமாக ஒரு சில ராசிகள் முழுமையான அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர், அவர்கள் யார் என்பது குறித்து தெரிந்து கொள்வோம்.
மகரம்
நவபஞ்ச யோகத்தால் அதிர்ஷ்டம் உண்டாகும், பணியிடத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு உண்டு, நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த வேலைகளுக்கு தீர்வு உண்டு, தன்னம்பிக்கை அதிகரிக்கும், எடுத்த வேலைகளில் கடின உழைப்புடன் வெற்றி கிட்டும்.
ரிஷபம்
நவபஞ்ச யோகத்தால் நிச்சயம் அதிர்ஷ்டம் உண்டு, நிதி நிலையில் முன்னேற்றம் இருக்கும், எதிர்பார்த்த வேலைகள் முடிவுக்கு வரும், பணியிடத்தில் மரியாதை அதிகரிக்கும், நண்பர்கள் மத்தியில் மரியாதை பெருகும்.
கன்னி
நவபஞ்ச யோகத்தால் உங்களுக்கு சாதகமான விடயங்கள் நடைபெறும் காலம் இது, வருமானத்தில் முன்னேற்றம் உண்டு, தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கப்பெறும், புதிய தொழிலை தாராளமாக தொடங்கலாம், பயணங்கள் பலன்களை தரும்.