இன்றைய ராசிபலன்(12-06-2025)
மேஷம்:
நாளை எல்லோரிடத்திலும் பணிவாக நடந்து கொள்வீர்கள். தொழில் ரீதியாக சந்தித்த சவால்களில் வெற்றி அடைவீர்கள். மனதில் சிறு பதட்டமும் பயமும் நிலவும். மதியம் மேல் நினைத்த காரியம் நிறைவேறும்.
ரிஷபம்:
நாளை உங்கள் உணவு பழக்கவழக்கங்களில் கவனமாக இருக்க வேண்டும். புதிய நட்புகளின் ஆதாயம் கிடைக்கும். முடிந்த வரை இன்று பிறரிடம் கடன் வாங்குவதையும் கொடுப்பதையும் தவிர்க்க வேண்டும்.
மிதுனம்:
நாளை உங்கள் வேலையில் சிறு தடைகள் தோன்றி மறையும். எதிர்கால வாழ்க்கையைப் பற்றிய பயமும் கவலையும் உண்டாகும். தந்தை உடல்நிலையில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
கடகம்:
நாளை உங்களுக்கு உடல் உபாதைகள் உண்டாகலாம். நட்பு வட்டாரம் விரிவு அடையும். உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். சிலருக்கு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் உண்டாகும்.
சிம்மம்:
நாளை உங்களுக்கு தொழிலில் எதிர்பாராத சிக்கல் ஒன்று காத்திருக்கின்றது. கணவன் மனைவி இடையே உள்ள கருத்துவேறுபாடுகள் இன்னும் விரிவடையும். மூன்றாம் நபரின் பேச்சுக்கள் கேட்பதை தவிர்க்கவும்.
கன்னி:
நாளை நீங்கள் செய்த தவறை நினைத்து வருத்தம் கொள்வீர்கள். பிரிந்த நட்புகள் உங்களை மீண்டும் தேடி வரும். வேலையில் சந்தித்த சிக்கல்கள் விலகும். ஒரு சிலருக்கு சுற்றுலா செல்லும் வாய்ப்புகள் உருவாகும்.
துலாம்:
நாளை மனதில் எதிர்காலம் பற்றிய குழப்பங்கள் உருவாகும். தாய் வழி உறவால் நன்மை கிடைக்கும். உணவு விஷயங்களில் மிகவும் கவனம் தேவை. வண்டி வாகனத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
விருச்சிகம்:
உங்கள் காதல் வாழ்க்கையில் சில சிக்கல்கள் உண்டாகும். இறைவழிபாடு நன்மை அளிக்கும். எதையும் தீர ஆலோசித்து செய்தால் வெற்றிகள் கிடைக்கும். திருமண வாழ்க்கையில் சந்தித்த கசப்புகள் விலகும்.
தனுசு:
நாளை உங்கள் வீட்டில் சுபகாரியம் பற்றிய பேச்சுக்கள் நடக்கும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள்.
மகரம்:
நாளை மகர ராசிக்கு எதிர்பார்த்த தகவல் ஒன்று தேடி வரும். வேலைக்காக வெளியூர் பயணம் செல்ல நேரிடலாம். அக்கம் பக்கத்தினரிடம் சற்று கவனமாக பேச வேண்டும். பொருளாதார சிக்கல் விலகும்.
கும்பம்:
கும்ப ராசிக்கு நாளை திருமண தொடர்பான பேச்சுக்கள் சாதகமாக அமையும். உங்கள் வாழ்க்கை ரகசியத்தை பிறரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். நட்புகள் உங்களுக்கு பகையாக வாய்ப்புகள் உள்ளது.
மீனம்:
மீன ராசிக்கு நாளை தொலைதூர பயணம் மேற்கொள்ள நேரிடலாம். சிலருக்கு உடலில் சிறு சிறு உபாதைகள் தோன்றி மறையும். மனைவி வழி சொந்தங்களால் ஆதாயம் உண்டு. நன்மையான நாள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |