இந்த ஒரே ஒரு கல் உங்கள் தலை எழுத்தையே மாற்றுமாம்.. என்ன தெரியுமா?
ஜோதிடத்தில் கல்வி, ஞானம், எழுத்து, கணக்கு போன்றவற்றுக்கு காரணியாக இருக்க கூடிய புதன் பகவானுக்கு உரிய கல்லாக மரகதக்கல் விளங்குகிறது. ஆக ஒருவர் மரகதக் கல் அணிந்து கொள்ளும் பொழுது அவர்கள் எல்லா விஷயங்களிலும் சிறந்து விளங்குவார்கள் என்று நம்பப்படுகிறது. அப்படியாக மரகத கல் அணிவதால் ஒருவருக்கு ஏற்படக்கூடிய 5 நன்மைகள் என்ன என்பதை பற்றி பார்ப்போம்.
1. நீங்கள் மரகத கல் அணியும் பொழுது உங்களுடைய புத்தி கூர்மையாகும் மாணவர்கள் இதை அணிந்து கொள்ளும் பொழுது அவர்கள் பாடங்களை எளிதாக புரிந்து கொள்ளவும் கல்வியில் கவனம் செலுத்தவும் ஞாபக சக்தி பெறவும் உதவியாக இருக்கிறது.
2. மேலும், புதன் பகவான் பேச்சுத் திறனுக்கு அதிபதியாக இருக்கிறார். ஆதலால் ஒருவர் மரகத கல் அணியும் பொழுது அவர்களுக்கு தெளிவான பேச்சுத் திறன் கிடைக்கிறது. இதை மேடைப் பேச்சாளர், ஆசிரியர்கள் மற்றும் ஊடகத் துறையில் இருப்பவர்கள் அணிந்து கொள்ளும் பொழுது அவர்களுக்கு நல்ல வளர்ச்சி கிடைக்கும்.

3. நீங்கள் வியாபாரம் செய்பவர்களாக இருந்தால் உங்களின் வியாபாரத்தில் நல்ல லாபத்தை அதிகரிக்கவும் புதிய வாய்ப்புகளை பெறவும் இந்த மரகத கல் அதிர்ஷ்டமாக வேலை செய்யும்.
4. ஒரு சிலர் எப்பொழுதும் தேவை இல்லாமல் புலம்பிக்கொண்டே இருப்பார்கள். சிறிய விஷயத்திற்கும் பெரிய அளவில் யோசித்து மன அழுத்தம் அடைந்து விடுவார்கள். அவர்களுடைய மன அழுத்தம் மற்றும் பதற்றம் குறைந்து மனதில் இருக்கக்கூடிய எதிர்மறை எண்ணங்கள் விலகி நேர்மறை எண்ணங்கள் பெற இந்த மரகத கல் உதவியாக இருக்கும்.
5. பொதுவாக, எழுத்தாளர்கள், கலைஞர்கள் மற்றும் புதிய விஷயங்கள் உருவாக்குபவர்களுக்கு இந்த மரகத கல் மிகப்பெரிய அளவில் உதவியாக இருக்கும். இது அவர்களுடைய கற்பனை திறனை வளர்த்து அவர்கள் வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு எடுத்துச் செல்லும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |