ஆமை சிலையை வீட்டில் வைப்பதனால் நடக்கும் அதிசயங்கள்

By Sakthi Raj Apr 04, 2025 06:30 AM GMT
Report

இந்து மதத்தில் வாஸ்து சாஸ்திரம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. வாஸ்து சாஸ்திரப்படி சில பொருட்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதுண்டு. அதில் மிக முக்கியமான பொருள் ஆமை. நம் வீடுகளில் ஆமை வைப்பது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது.

ஆமை சிலை வீட்டில் வைப்பதால் நமக்கு குடும்பத்தில் மகிழ்ச்சியும் செழிப்பும் உண்டாகும். காரணம், ஆமை வடிவில் விஷ்ணு அவதரித்ததாக புராணங்கள் சொல்லுகின்றன. ஆமை விஷ்ணுவின் கூர்ம அவதாரம் என்றும் அழைக்கப்படுகின்றது. அப்படியாக, வீட்டில் ஆமை சிலை வைப்பதனால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்ப்போம்.

ஆமை சிலையை வீட்டில் வைப்பதனால் நடக்கும் அதிசயங்கள் | Tortoise And Its Vastu Benefits

ஆமை சிலை வீட்டில் வைப்பதால் பல விதமான நன்மைகள் கிடைக்கும் என்றாலும் ஆமை வைப்பதற்கு என்றும் உரிய திசை இருக்கிறது. அந்த திசையில் வைப்பதனால் மட்டுமே நமக்கு நேர்மறை சக்திகள் உருவாகிறது.

எதற்காக நாம் நவகிரகங்களை வழிபாடு செய்யவேண்டும்?

எதற்காக நாம் நவகிரகங்களை வழிபாடு செய்யவேண்டும்?

இல்லையென்றால் எதிர்மறை ஆற்றல் சூழ்ந்துவிடும். நம் வீடுகளில் வாஸ்துபடி வீட்டின் பூஜையறையில் ஆமை சிலையை தண்ணீரால் நிரப்பப்பட்ட பித்தளை பாத்திரத்தில் வைக்கவேண்டும். அவ்வாறு ஆமை சிலை வைக்க முடியாவிட்டால் ஆமையின் படத்தை கூட வைக்கலாம்.

ஆமை சிலையை வீட்டில் வைப்பதனால் நடக்கும் அதிசயங்கள் | Tortoise And Its Vastu Benefits

மேலும், ஆமை சிலையை வீட்டில் வைக்கும் பொழுது வடக்கிழக்கு திசையில் தான் வைக்க வேண்டும். நாம் அதே போல் வெளியில் செல்லும் பொழுது ஆமை சிலையை அல்லது படத்தை பார்த்து செல்லும் பொழுது போகும் காரியம் வெற்றிகரமாக அமையும்.

நம் வீட்டில் குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்க வடக்க அல்லது வடமேற்கு திசையில் வைப்பது நல்ல மாற்றம் கொடுக்கும்.  வடக்கில் வைத்தால் குழந்தைகளின் வாழ்க்கை நன்றாக இருக்கும் படிப்பில் கவனம் செலுத்துவார்கள். அதுவே வடமேற்கு திசையில் வைத்தால் முழு மனதுடன் படிப்பில் கவனம் செலுத்த உதவுகிறது.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US