சனி பகவான் வீட்டில் கூடும் யோகங்கள் - கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள்
2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மகர ராசியில் வலுவான திரிகிரஹி யோகம் ஏற்படும்.
இந்த யோகம் கிரகங்களின் ராஜாவான சூரியன், ஆடம்பரத்தை தரும் சுக்கிரன் மற்றும் வியாபாரத்தை அளிக்கும் புதன் ஆகியோரின் இணைவால் உருவாகிறது. இது சில ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான செல்வத்தை தரப்போகிறது. அந்த ராசிகள் குறித்து பார்ப்போம்..

மேஷம்
உங்கள் வேலை மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றத்தை அனுபவிக்க முடியும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல இடத்தில் வேலை கிடைக்கக்கூடும். திடீர் நிதி ஆதாயமும் ஏற்பட வாய்ப்புள்ளது. தொழிலில் எதிர்பார்த்து காத்திருந்த புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
தனுசு
எதிர்பாராத நிதி ஆதாயங்களை அனுபவிக்கலாம். தொழில் செய்து வருபவர்கள் இந்த நேரத்தில் நல்ல லாபத்தைக் காண்பார்கள். மேலும் அனைத்து வகையான சவால்களையும் புத்திசாலித்தனமாக எதிர்கொண்டு வெற்றியைப் பெற முடியும். குடும்பத்திலும் சமூகத்திலும் நற்பெயர் அதிகரிக்கும்.
மீனம்
புதிய வருமான ஆதாரங்கள் மூலமும் நீங்கள் பணம் சம்பாதிக்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி மற்றும் செழிப்பு நிறைந்த சூழல் உருவாகும். நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களிடமிருந்து உங்களுக்கு ஆதரவு கிடைக்கும். ஏற்கனவே செய்த முதலீடுகள் மூலமும் லாபம் கிடைக்கும்.