சனிக்கிழமை அன்று மறந்தும் இந்த இரண்டு நிற ஆடைகளை அணியாதீர்கள்
பொதுவாக சனிபகவான் கோபப்படுகிறார் என்றால் அதற்கு பல காரணம் இருக்கும்.எவர் ஒருவர் வாழ்க்கையில் தேவை இல்லாத அகங்காரம் ஆணவம் கொண்டு பிறரை துன்புறுத்தி வாழ்கிறாரோ அவர்களை நிச்சயம் தண்டித்து விடுவார்.
மேலும் சனி பகவான் கோபப்படுவதற்கு மற்றொரு காரணமும் இருக்கிறது.அதாவது சனிக்கிழமை சனிபகவானுக்கு உகந்த நாள்.அன்றைய தினத்தில் சனிபகவான் கோபம் அடையும் எந்த நிற ஆடைகளையும் நாம் அணியக்கூடாது.
பலரும் சனிக்கிழமை அன்று சனிபகவானுக்கு உரிய கருப்பு நிற ஆடைகளை அணிவார்கள்.கருப்பு என்பது சனி பகவானின் நிறம் என்பதால், சனிக்கிழமையன்று கருப்பு அணிந்தால் சனியின் அருள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
மேலும் ஜோதிடத்தில் கருப்பு நிறம் ஆழமான முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.இந்த கருப்பு நிறம் ஒரு நபரின் ஆளுமைப் பண்புகளை தீர்மானிக்க உதவுகிறது. மேலும் சனிக்கிழமையில் கருப்பு நிற ஆடையை அணிவதால் பல நன்மைகள் கிடைக்கும்.
மேலும் ஜோதிட ரீதியாக கருப்பு நிறம் பாதுகாப்பு நிறமாக சொல்லப்படுகிறது.பொதுவாக வாழ்க்கையில் கெட்ட செயல்கள் செய்பவர்களை சனிபகவான் உடனே தண்டித்து விடுவார்.ஆதலால் பலரும் சனியின் கோபத்தை போக்க சனிக்கிழமை அன்று கருப்பு நிறம் அணிவார்கள்.
அதோடு ஒருவர் ஜாதகத்தில் உங்கள் ஜாதகத்தில் சனி தோஷம் அல்லது சதே சதி பிற பிரச்சனைகள் இருந்தால் அதிலிருந்து உங்களுக்கு நிவாரணம் கிடைக்கும்.
அதே போல் சனி பகவானுக்கு கருப்பு நிறத்தை தாண்டி நீல நிறமும் பிடிக்கும்.ஆக சனிக்கிழமை அன்று இந்த இரண்டு நிற ஆடைஅணிவதால் நாம் சனிபகவானின் பரிபூர்ண அருளை பெறலாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |