மறந்தும் இந்த நேரங்களில் இந்த தெய்வங்களை வழிபாடு செய்யாதீர்கள்
நம்முடைய வழிபாட்டில் எப்பொழுதும் உக்கிர தெய்வங்களை வழிபாடு செய்யும் பொழுது மனதில் ஒரு வித தெம்பும் தைரியமும் பிறக்கும்.உக்கிர தெய்வங்களை வழிபாடு செய்ய அவர்களை போல் நம்மக்கு எதிர்த்து போராடும் குணம் வந்து விடும்.
அப்படியாக சில உக்கிர தெய்வங்களை வழிபாடு செய்யும் பொழுது சில தெய்வங்களை வழிபாடு செய்வதை தவிர்க்க வேண்டும் என்று சொல்கின்றனர்.அதை பற்றி பார்ப்போம்.
- நரசிம்மர் வழிபாடு செய்யும் பொழுது ஒரு போதும் சரபேஸ்வரர் உபாசனை அல்லது வழிபாடு செய்யக்கூடாது
- கருட உபாசனை வழிபாடு செய்பவர்கள் ஒரு போதும் நாகதேவதை வழிபாடு செய்யக்கூடாது
- பிரத்யங்கரா உபாசனை அல்லது வழிபாடு செய்பவர்கள் ஒரு போதும் நரசிம்மர் உபாசனை வழிபாடு செய்யக்கூடாது
- சூலினி உபாசனை வழிபாடு செய்பவர்கள் நரசிம்மர் உபாசனை வழிபாடு செய்யக் கூடாது்
மீறி செய்யும் பொழுது அவர்களுக்கு பல வித மன அழுத்துங்கள் உண்டாக வாய்ப்புள்ளது.உக்கிர தெய்வங்கள் வழிபடும் பொழுது ஏதேனும் ஒரு தெய்வத்தை தான் முழு சக்தி கொண்டு வழிபாடு செய்ய முடியும்.
ஆக நிதானமாக பல ஆற்றல் கொண்ட உக்கிர தெய்வங்களை வழிபாடு செய்யும் பொழுது கவனமாக வழிபாடு செய்து அவர்களின் பரிபூர்ண அருளை பெறுவோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |