UNESCO பட்டியலில் தென்னிந்தியாவின் 6 பிரம்மாண்ட கோயில்கள்
தென்னிந்தியாவை எடுத்துக்கொண்டால் மிகவும் அழகான மற்றும் பிரமாண்டமான கோயில்கள் அதிகம். அவற்றில் பல கோயில்கள் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
இந்த கோயில்கள் நம்முடைய பாரத நாட்டின் பெருமையை உணர்த்தும் வகையில் வியப்பூட்டும் கட்டிடக்கலை, நுணுக்கமாக செதுக்கிய சிற்பங்கள் என்று நம்முடைய பாரம்பரியத்தை வெளிப்படுத்துகிறது. அந்த வகையில் UNESCO உலக பாரம்பரிய தளங்கள் பட்டியலில் இடம் பெற்ற தென்னிந்தியாவின் 7 பிரம்மாண்ட கோயில்கள் பற்றி பார்ப்போம்.
1. தஞ்சாவூரில் உள்ள பிரகதீஸ்வரர் கோவில்:
தமிழ்நாட்டின் அடையாளமாக தஞ்சை பெரியகோயில் இருக்கிறது. தஞ்சாவூரில் உள்ள பிரகதீஸ்வரர் கோயில் இந்தியாவின் மிக பெரிய கோயிலில்களில் ஒன்றாக திகழ்கிறது. இக்கோயில் சோழ மன்னர் ராஜா ராஜ சோழனால் கிபி 2019 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது.
இந்த கோயில் நுட்பமான கட்டிடக்கலையை அடிப்டையாகக் கொண்டு கட்டப்பட்டது. இக்கோயிலில் அமைந்து இருக்கும் பிரமாண்ட சிவலிங்கமும், நந்தியும் கோயிலின் கோபுர அமைப்பும் நம்மை பக்தியின் வியப்பில் ஆழ்த்துகிறது.
2. தாராசுரத்தில் உள்ள ஐராவதேஸ்வரர் கோயில்:
மிகவும் அழகான சிவன் கோயில்களில் தாராசுரத்தில் உள்ள ஐராவதேஸ்வரர் கோயிலும் ஒன்று. தாராசுரத்தில் அமைந்துள்ள இந்த பிரம்மாண்ட கோவில் தேர் போன்ற அழகிய சிற்பங்களைக் கொண்டது. இக்கோயிலில் உள்ள சுவர்கள் பண்டைய காலத்து இந்திய புராணங்களை எடுத்துரைக்கும் வகையில் உருவாக்கப் பட்டு உள்ளது.
இந்த கோயிலின் மிக முக்கியமான சிறப்பம்சம் வழிபீடத்திற்குச் செல்லும் ஏழு படிகள். இவை ஏழு ஸ்வரங்களை இசைக்கும் இன்னிசைப்படிகள். இவை இன்று வரைக்கும் காணும் மக்களை அதிசயத்தில் ஆழ்த்துகிறது.
இக்கோயிலில் காணும் இடம் எல்லாம் பிரமாண்டமான யானையின் சிற்பங்கள், நாயன்மார்களின் சிற்பங்கள், நடன வகைகளையும் வீர விளையாட்டுகளையும் விவரிக்கும் சிற்பங்கள் என பார்ப்பவரை பார்த்துக்கொண்டே வைக்கும் வகையில் அமைந்து இருக்கிறது.
3. மாமல்லபுரம் கடற்கரை கோவில்:
சென்னையில் அமைந்து உள்ள மிகவும் பிரமாண்டமான கோயில்களில் மாமல்லபுரம் கடற்கரை கோவில் முதன்மை வகிக்கிறது. இக்கோயில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட கோயில். இங்கு சிவபெருமான் விஷ்ணு ஆகிய இரண்டு தெய்வங்களின் சந்நிதிகளையும் கொண்டுள்ளது.
4. மகிஷாசுரமர்த்தினி மண்டபம்:
பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட மிகவும் பிரமாண்டமான கோயில்களில் மகிஷாசுரமர்த்தினி மண்டபமும் ஒன்று. பாறையில் வெட்டப்பட்ட கட்டிடக்கலைக்கு உன்னத எடுத்துக்காட்டாக திகழ்கிறது. இது குகை கோயிலாகும்.
குகைக்கோயிலாக இருந்தாலும் இதில் பல்வேறு சிறப்பம்சங்கள் அமைந்து உள்ளது. இதில் உள்ள மூன்று கருவறைகளின் குகை சுவர்களில் நேர்த்தியாக செதுக்கப்பட்ட புடைப்பு சிற்பங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. இதில் உள்ள மூன்று கருவறைகளின் குகை சுவர்களில் நேர்த்தியாக செதுக்கப்பட்ட புடைப்பு சிற்பங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை.
5. விருபாக்ஷா கோயில்:
இது ஒரு பிரமாண்டமான சிவன் கோயில். ஹம்பியின் மையத்தில் அமைந்துள்ள இக்கோயில் ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இக்கோயிலின் கோபுரம் மிகவும் கம்பீரமான தோற்றத்தை கொண்டது.
இந்த கோவிலில் உள்ள முக்கிய தெய்வம் பம்பா பதி என்று அழைக்கப்படும் விருபாட்ச பகவான். இக்கோயிலின் அதிசயம் என்னவென்றால் பிரதான கோபுரத்தின் நிழல் தலைகீழாக கோவிலுக்குள் உள்ள சுவரில் விழுவது தான்.
6. கடலேகலு விநாயகர் கோவில்:
ஹம்பியில் உள்ள மற்றொரு முக்கியமான மற்றும் பிரம்மாண்டமான கோயில் கடலேகலு விநாயகர் கோவில் ஆகும். இங்கு அமையப்பெற்று இருக்கும் விநாயகர் உலக புகழ் பெற்றது. ஹம்பிக்கு சுற்றுலா செல்பவர்கள் தவறாமல் இக்கோயிலுக்கு சென்று வருவார்கள். இங்குள்ள விநாயகர் சிலை சுமார் 15 அடி உயரம் கொண்டது. அதோடு, இங்குள்ள விநாயகர் சிலை ஒரே பாறையில் செதுக்கப்பட்டது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







