வீட்டில் உள்ள வாஸ்து தோஷம் விலக எளிய பரிகாரம்
இந்த காலகட்டத்தில் நமக்கு ஏற்ற இடத்தில் மனை வாங்கி வீடு கட்டுவது என்பது பெரிய விஷயமாகிவிட்டது.
அதிலும் கஷ்டப்பட்டு வீடு வாங்கி குடியேறிய பிறகு சந்தோஷம் நிறைந்திருக்கும் என்று பார்த்தால் துன்பங்கள் கஷ்டங்கள் வந்து கொண்டு இருக்கும்.
அப்பொழுது தான் வீட்டின் வாசற்கதவு சரி இல்லை, வீட்டின் அமைப்பு சரி இல்லை என்றெல்லாம் பிரச்னைகள் வரும்.
அதில் இருந்து எப்படி வெளி வருவது என்ற குழப்பம் நம்மை கஷ்டத்துக்குள் கொண்டு சென்று விடும்.
உண்மையில் எல்லாவற்றுக்கும் பரிகாரம் இருக்கிறது. அதை சரிவர செய்தால் வாஸ்துவினால் ஏற்படும் தோஷம் நீங்கி மகிழ்சியாக வாழலாம்.
அதாவது வாஸ்து தோஷம் நீங்க வெள்ளிக்கிழமைகளில் துர்கை அம்மனுக்கு எலுமிச்சை பழத்தில் தீபம் ஏற்றுவது நலம் தரும்.
மேலும் ராகுவுக்கு மந்தாரை மலர் வைத்து வழிபாடு செய்யலாம்.
பௌர்ணமி தினத்தில் அழகர் கோயில் தீர்த்த தொட்டியில் குளித்து ராக்காயி அம்மனுக்கு எலுமிச்சை பழம் மாலை அனுவிப்பது சிறப்பு தரும்.
மேலும் தினமும் வீட்டில் 27 முறை வாஸ்து காயத்ரி மந்திரம் சொன்னால் வீட்டில் உள்ள அனைத்து தோஷங்களும் விலகும்.
திருநாகேஸ்வரம் சென்று ராகு காலத்தில் ராகுவுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபடுவது நன்மை தரும்.