தடைகள் விலக நாளை (23-05-2025) செய்ய வேண்டிய வருதினி ஏகாதசி வழிபாடு
ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய ஏகாதசி மிகவும் விஷேசமானது. அப்படியாக, நாளை (23-5-2025) வைகாசி மாதத்தின் தேய்பிறை ஏகாதசி திதியானது வரவிருக்கிறது. இந்த ஏகாதசிக்கு வருதினி ஏகாதசி என்றும் பெயர். நாளைய தினம் எவர் ஒருவர் பெருமாளை நினைத்து வழிபாடு செய்கிறார்களோ அவர்களுக்கு பெருமாளின் அருள் பரிபூர்ணமாக கிடைக்கும் என்பது நம்பிக்கை.
மேலும், மார்கழி மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசி மிக மிக சிறப்புகள் வாய்ந்தது. அந்த நாளில் விரதம் இருந்து வழிபாடு செய்தால் என்ன பலன் கிடைக்குமோ, அதே பலன் நாளைய தினம் வருதினி ஏகாதசியில் விரதம் இருந்து வழிபாடு செய்தால் கிடைக்கும் என்கிறார்கள்.
நாளைய தினம் சனி பகவானுக்கு உரிய உத்திராட நட்சத்திரமும் இருக்கிறது. சுக்கிரனுக்கு உரிய வெள்ளிக்கிழமை தினத்தில், இந்த ஏகாதேசி வந்திருப்பது கூடுதல் சிறப்பு என்றே சொல்லலாம். அப்படியாக, நாளைய தினம் பெருமாளின் அருளை பெற வருதினி ஏகாதசி விரதத்தை எவ்வாறு கடைப்பிடிக்க வேண்டும் என்று பார்ப்போம்.
நாளைய தினம் அதிகாலை எழுந்து குளித்து பெருமாளை மனதார வழிபாடு செய்து இந்த விரதத்தை தொடங்க வேண்டும். விரதம் இருக்கமுடிந்தவர்கள் விரதம் மேற்கொள்ளலாம் முடியாதவர்கள் பெருமாள் ஆலயம் சென்று வழிபாடு செய்து வரலாம்.
அதோடு நாளை மிக முக்கியமாக இந்த இரண்டு இலைகள் கொண்டு நாம் பூஜை செய்யவேண்டும். அதில் ஒன்று தான் மஹாலக்ஷ்மி தாயாருக்குரிய துளசி இலை, அடுத்தபடியாக குபேரருக்கு சொந்தமான நெல்லி மரத்து இலை.
அதை எடுத்து வந்த பிறகு, பெருமாளுக்கும் மகாலட்சுமிக்கு வாசனை நிறைந்த பூக்கள் துளசி இலைகளால் அலங்காரம் செய்துவிட்டு, ஒரு சின்ன தட்டில் நெல்லி மரத்து இலைகளை பரப்பி அதன் நடுவே ஒரு மண் அகல் விளக்கு வைத்து, தீபம் ஏற்றி பெருமாளை மனமுருகப் பிரார்த்தனை செய்து “ஓம் நமோ நாராயணா” கோவிந்தா கோவிந்தா கோவிந்தா! என்ற மந்திரத்தை 108 முறை சொல்லி வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.
இந்த வழிபாட்டை நாளை மாலை 6 மணிக்கு செய்யவேண்டும். அதாவது, நாளைய தினம் வரக்கூடிய ஏகாதசி திதி, நாளை மாலை அதாவது வெள்ளிக்கிழமை மாலை 6:45 மணி வரை மட்டுமே இருக்கிறது.
அதனால் நாம் மாலை இந்த வழிபாட்டை 6. 30 மணிக்குள் செய்து விடவேண்டும். இவ்வாறு செய்ய நிச்சயம் மனதளவிலும் உங்கள் வாழ்க்கையிலும் நீங்கள் மாற்றத்தை பார்க்கலாம். அதோடு பெருமாளின் அருளால் உங்கள் வாழ்க்கையில் உள்ள துன்பங்களை விலகி முன்னேற்றம் கிடைக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |