இன்றைய ராசி பலன்(10.01.2025)
மேஷம்:
நேற்று எற்பட்ட நெருக்கடிகள் விலகும்.அலுவலகத்தில் உண்டான பிரச்சனைகள் படிப்படியாக குறையும்.நினைத்த வேலையை சரியாக செய்து முடிப்பீர்கள்.நன்மையான நாள்.
ரிஷபம்:
இன்று மிகவும் கவனமாக செயல்படவேண்டிய நாள்.பிறர் பேச்சை மதித்து நடந்தாலும்,உங்கள் மனம் சொல்வது போல் செயல்படுங்கள்.மதியம் வரை சிறு சிறு தடங்கல் உண்டாகலாம்.கவனம் அவசியம்.
மிதுனம்:
இன்று குடும்பமாக ஒற்றுமையாக செல்வீர்கள்.உங்கள் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.உயர் அதிகாரிகளிடம் சற்று கவனமாக இருக்கவேண்டும்.வீண் குழப்பங்கள் உங்கள் இன்றைய நாளை பாதிக்கக்கூடும்.
கடகம்:
நீண்டநாள் முயற்சி இன்று வெற்றியாகும். வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். பொருளாதார நிலை உயரும்.தடைபட்ட வேலைகள் நடந்தேறும்.
சிம்மம்:
நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி ஆகும்.எதிர்ப்பாராத நபரை சந்திப்பதால் ஆதாயம் கிடைக்கும்.வியாபாரத்தில் முதலீடு செய்யும் பொழுது கவனமாக இருக்கவேண்டும்.
கன்னி:
நேற்றைய பிரச்னைகள் முடிவிற்கு வரும். பிறரை அனுசரித்துச் செல்வதால் ஆதாயம் கூடும். பெரிய மனிதர்கள் ஆதரவு கிடைக்கும்.இழுபறியாக இருந்த ஒரு பிரச்னை முடிவிற்கு வரும்.
துலாம்:
உடல் சோர்வு உண்டாகும்.திடீர் பண நெருக்கடிக்கு ஆளாகலாம்.நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது வேறாக இருக்கும்.உடன் பணிபுரிபவர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.
விருச்சிகம்:
எதிர்பார்த்த செய்தி வரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.கூட்டுத் தொழிலில் இருந்த பிரச்னை நீங்கும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும்.
தனுசு:
இன்று தனுசு ராசிக்காரர்களுக்கு யோகமான நாள்.மனதில் நீண்ட நாள் இருந்த குழப்பம் விலகும்.தொழில் போட்டியாளரால் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர். வழக்கு விவகாரம் சாதகமாகும்.
மகரம்:
பூர்வீக சொத்து விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். விருப்பம் பூர்த்தியாகும்.விழிப்புடன் செயல்படுவதால் உங்கள் வேலைகள் வெற்றியாகும். வரவேண்டிய பணம் வரும்.
கும்பம்:
வருமானத்தில் எதிர்பாராத நெருக்கடி உண்டாகும். மனம் குழப்பமடையும். உடல்நிலையில் சிறு சங்கடம் தோன்றும்.அந்நியரால் குடும்பத்தில் குழப்பம் ஏற்படும்.மனம் சோர்வடையும்.
மீனம்:
நீண்ட நாள் உங்கள் கைக்கு வரவேண்டிய பணம் வரும்.நண்பர்கள் விஷயத்தில் சற்று கவனமாக இருக்கவேண்டும்.குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.தடைகள் விலகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |