சிவபெருமான் உண்மையில் கல் நெஞ்சம் கொண்டவரா?
பலருக்கும் சிவபெருமான் என்றால் ஐயோ!அவரை வணங்கினால் துன்பம் மேல் துன்பம் கொடுப்பார்.கல் நெஞ்சம் படைத்தவர் என்பார்கள். ஆம் உண்மையில் எம்பெருமான் கல் நெஞ்சம் கொண்டவர் தான்.நாம் தினம் அவன் கோயில் சென்று மண்டியிட்டாலும்,எம்பெருமானை உணரவேண்டும்,அவனின் அனந்த கண்ணீரில் நனைய வேண்டும் என்றாலும் அப்பன் மனம் வைத்தாலே முடியும்.
அவ்வாறு ஈசன் மனம் வந்து அவன் பார்வை நம் மீது விழும் வரை அவன் கல் நெஞ்சம் படைத்தவன் தான்.ஆனால் ஒரு முறை எம்பெருமான் மனம் இறங்கி,நம்மை ஆட்கொண்டு விட்டால் கருணை கடலின் அன்புள்ளத்தை பரிபூர்ணமாக உணர முடியும்.
பிறகு,உலகித்தின் மொத்த அன்பையும் நம் மீது பொலிந்து விடுவான்.எதையும் சாதிக்கும் துணிச்சல் கொடுப்பார்.உன் நாமம் மட்டுமே போதும் நான் உயிர் வாழ்வேன் என்று உண்மையை உணர்த்துவார்.பிறந்தால் இறந்ததாக வேண்டும்.அப்படி இறப்பு என்னை தழுவினாலும் உன் திருநாமம் கேட்டபடியே என் உடலும் எரிந்து சாம்பலாக வேண்டும் என்று வேண்டுதலை வைக்கத்தூண்டுவான்.
இத்தனை அன்பு கொண்டவனே!உன்னை உணராமல்,சில வேடிக்கை மனிதர்கள் சிவன் அவன் கல் நெஞ்சம் கொண்டவன் என்றும்,சுடுகாட்டு சாமி என்று கூறுகிறார்களே!அவர்களிடம் நான் எப்படி சொல்லுவேன் உன் தாய் உள்ளதை பற்றி என்று மனம் கண்ணீரில் மிதக்கும்.
அதோடு,சைவத்தின் வழிநடத்துனராக போற்றப்படும் 63 நாயன்மார்களின் உண்மை பக்தியும் அவர்களின் தூய்மையான அன்பை புரிந்துகொள்ள வைப்பான்.அது வரையில் படிக்கும் பெரியபுராணம் வெறும் கதையாக தெரியும்.
உன் எத்தனை அன்பில் திளைத்திருந்தால் திருவாசகம் என்னும் அற்புத படைப்பு மாணிக்கவாசகரால் பிறந்திருக்கும்.உன்அன்பு எவ்வளவு தூரம் ஆட்கொண்டு இருந்தால் கண்ணப்ப நாயனார் தன் கண்களையே படைக்க துணிந்திருப்பார் என்று ஒவொன்றாய் புரிய வைத்து ஈசன் நம் மனதை ஆட்கொண்டு இருப்பார்.
இவ்வாறு அன்பு பாதையில் கூட்டி சென்று இருக்கும் பொழுது திடீர் என்று நம் கைகளை தகர்த்தி விட்டு செல்வார்.ஆம்!உடலும் உயிரும் சதா நமச்சிவாய என்று அவனை நினைத்து கொண்டு இருக்க,திடீர் என்று விலகி சென்றால் மனமும் உயிரும் எப்படி பொறுத்து கொள்ளும்.
அவன் இன்றி உலகம் அறியாது என்று வாழவைத்தவன்.எந்த ஒரு தயக்கமும்,அன்பும் இன்றி விலகி செல்லும் பொழுது ,செய்வதறியாது மனம் அவன் காலடி பிடித்து கதறும்.மறுபடியும்,என்னை உன்னிடம் சேர்த்து கொள் ஈசனே என்று உயிர் புலம்பும்.ஆனால் அவருடைய செவிகள் எதையும் கண்டுகொள்ளாதது போல் இயல்பாக இருக்கும்.
இவ்வாறு ஈசனை பிரிந்து தவிக்கும் நம் மனம் பிரிவை பொறுத்து கொள்ள முடியாமல் அழுகையின் உச்சம் சென்று அவன் மீது கோபம் கொள்ள முடியாமல் தவிக்கும் பொழுது பிறர் சொல்வது உண்மை தானோ!நிஜத்தில் நீ கல் நெஞ்சம் படைத்தவனோ! நீ செய்யும் அநியாயத்தை யாரிடம் சென்று கொட்டி தீர்ப்பது என்று செய்வதறியாது மனம் வாடும்.அவ்வாறு வாடி அழும் காலத்தில் தான் நம்முடைய கர்ம வினைகள் எல்லாம் நம்மை விட்டு விலகுகிறது.
அதே போல் காலம் கடக்கும் பொழுது ஈசன் விடைக்கொடுப்பான்.அவனின் அந்த திடீர் பிரிவும் இன்னும் கூடுதல் பக்திக்காக அவனுடைய நெருக்கத்திற்காக என்று.
ஆக ஒரு மனிதன் ஆன்மீகத்திலும் சரி வாழ்க்கையிலும் சரி சந்திக்கும் சில ஏற்ற இறக்கங்களை எவனால் பொறுமை காத்து கடக்க முடிக்கிறதோ அவர்களால் மட்டுமே மிக பெரிய வெற்றியை அடைய முடியும்.
ஓம் நமச்சிவாய!!!
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |