காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோவிலில் கருடசேவை வைபவம்

By Yashini Jun 03, 2024 06:38 AM GMT
Report

வைகுண்ட பெருமாள் கோயில் தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள இந்துக் கடவுளான விஷ்ணுவின் கோயிலாகும்.

விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட 108 திவ்யதேசங்களில் இதுவும் ஒன்றாகும், அவர் வைகுண்டநாதன் என்றும் அவரது மனைவி லட்சுமி வைகுண்டவல்லி என்றும் வணங்கப்படுகிறார்.

அந்த வகையில் வைகுண்ட பெருமாள் திருக்கோவிலில் குரோதி ஆண்டு வைகாசி மாத பிரம்மோற்சவம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோவிலில் கருடசேவை வைபவம் | Vaikasi Promotsavam Garudaseva At Kanchipuram

நேற்று அம்ச வாகனத்தில் சுவாமி எழுந்தருளினார். மாலை சூரிய பிரபை வாகனம் உற்சவமும் நடைபெற்றது.

இந்நிலையில் இன்று காலை கருட சேவை உற்சவம் நடைபெற்றது. மேலும், இன்று மாலை அனுமன் வாகன உற்சவமும் நடைபெற உள்ளது.

இதனைத்தொடர்ந்து பிரமோற்சவத்தின் நான்காவது நாளான நாளை சேஷ வாகனம். மாலை வேளையில் சந்திர பிரபை உற்சவம் நடைபெறுகிறது.

காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோவிலில் கருடசேவை வைபவம் | Vaikasi Promotsavam Garudaseva At Kanchipuram    

5வது நாள்- சாலை உற்சவம் நாச்சியார் திருக்கோலத்தில் பல்லாக்கு உற்சவம், தொடர்ந்து மாலை யாளி வாகன உற்சவம் நடைபெற உள்ளது.

6-வது நாள்- உற்சவம் வேணுகோபாலன் திருக்கோளத்தில் சப்பரத்தில் எழுந்தருளுகிறார். மாலை வேளையில் யானை வாகன உற்சவம் நடைபெறுகிறது.

7-வது நாள் எடுப்பு தேர் உற்சவம் நடைபெறுகிறது.

8-வது நாள்- வெண்ணெய் தாழி கண்ணன் பல்லாக்கு மற்றும் மாலை வேளையில் குதிரை வாகனம்.

9-வது நாள் உற்சவம் பல்லாக்கு மற்றும் தீர்த்த வாரி நடைபெறுகிறது மாலை முகுந்த விமான உற்சவமும் நடைபெற உள்ளது.   

  ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.  


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US