2026: வைகுண்ட ஏகாதசி எப்போது? பெருமாளின் அருளைப் பெற இந்த வழிபாட்டைத் தவறவிடாதீர்கள்
பெருமாள் வழிபாடுகளில் வைகுண்ட ஏகாதசி வழிபாடு என்பது மிகவும் முக்கியமான மற்றும் சிறப்பான வழிபாடாக பார்க்கப்படுகிறது. மார்கழி மாதம் வளர்பிறையில் வரக்கூடிய ஏகாதசியை நாம் வைகுண்ட ஏகாதசி என்கின்றோம்.
இதற்கு முக்கோடி ஏகாதசி, சொர்க்கவதி ஏகாதசி என பல பெயர்கள் உள்ளன. மேலும், வருடத்தில் வரக்கூடிய 23 ஏகாதிசிகளும் பாவத்தை போக்கி பலவிதமான நன்மைகளை வழங்க கூடியதாக இருந்தாலும், மார்கழி மாதத்தில் வரக்கூடிய இந்த ஏகாதசிதான் பெருமாளுடைய திருவடியை அடைந்து மோட்சத்தை தரக்கூடிய புண்ணிய நாளாக கருதப்படுகிறது.
வைகுண்ட ஏகாதசி நாளில் தான் அனைத்து பெருமாள் ஆலயங்களிலும் சொர்க்கவாசல் என அழைக்கக்கூடிய பரமபத வாசல் திறக்கப்படுகிறது. இந்த வாசல் வழியாக செல்வது நமக்கு பெருமாளின் முழு அருளையும் பெற்றுக் கொடுக்கும் என்பது நம்பிக்கை.

மேலும், மகாவிஷ்ணு முராசுரனை வதம் செய்த தினம் என்றும் பகவத் கீதை உபதேசிக்கப்பட்ட தினம் என்றும் போற்றப்படுகிறது. ஸ்ரீரங்கத்தில் பகல் 10 உற்சவங்களுடன் 21 நாள் விழாவாக வைகுண்ட ஏகாதசி விழா கொண்டாடப்படுவது வழக்கம்.
இந்த வைகுண்ட ஏகாதசி தினத்தன்று உபவாசம் இருந்து இரவு முழுவதும் கண் விழித்து பெருமாளை பக்தியுடன் வழிபாடு செய்தால் நமக்கு இறந்த பிறகு வைகுண்டத்தில் ஒரு இடம் உண்டு என்பது பக்தர்களின் நம்பிக்கை.
வைகுண்ட ஏகாதசி 2026 :
வைகுண்ட ஏகாதசி 2026 தேதி டிசம்பர் 20 ஞாயிறு
ஏகாதசி திதி துவக்கம் டிசம்பர் 19 மாலை 05.19
ஏகாதசி திதி நிறைவு டிசம்பர் 20 மாலை 04.02
கண் விழிக்க வேண்டிய நாள் டிசம்பர் 20
வைகுண்ட ஏகாதசி தோன்றிய கதை :
பத்ம புராணத்தின் அடிப்படையில், ஒருமுறை மகாவிஷ்ணு ஒரு குகையில் ஓய்வெடுத்து கொண்டிருந்த பொழுது மூரன் அசுரன் அவரை கொல்ல வருகிறார்.
அப்போது, விஷ்ணுவின் 11 ஆவது ஆற்றலில் இருந்து ஒரு தெய்வீக தோன்றி அந்த அசுரனை அழித்தாள். அவளுக்கு "ஏகாதசி" என பெயர் சூட்டிய மகாவிஷ்ணு இந்த நாளில் எவர் ஒருவர் விரதம் இருந்து அவரை வழிபாடு செய்கிறாரோ அவர்கள் சொர்க்கத்தை அடைவார்கள் என்ற வரத்தையும் கொடுக்கிறார்.

அதேபோல், மற்றொரு கதையின் அடிப்படையில் தன் மீது பக்தி கொண்ட அசுரர்களின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு இந்த நாளில் மட்டும் வடக்கு வாசல் வழியாக பெருமாள் வெளியே வருவதாக சொல்லப்படுகிறது.
அதை நினைவு கூறும் வகையிலே இந்த நாளில் கோவிலில் வடக்கு பகுதியில் இருக்கக்கூடிய வைகுண்ட ஏகாதசி திறக்கப்படுகிறது. மேலும், மார்கழி மாதம் தேவர்களுடைய அதிகாலை பொழுது என்பதால் மார்கழி மாதத்தில் வரக்கூடிய ஏகாதசி தினத்தை முப்பத்து முக்கோடி தேவர்களும் ஸ்ரீரங்கம் ரங்கநாதரை செய்ய வருவதாக ஐதீகம். ஆதலால். இந்த தினத்தை ஏகாதசி என்றும் அழைக்கின்றோம்.
ஏன் இந்த நாளில் கண் விழிக்க வேண்டும்?
இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த தினத்தில் தேவர்கள் பெருமாளை வழிபாடு செய்ய வருகின்ற நேரத்தில் நாமும் தூங்காமல் கண் விழித்து வழிபாடு செய்தால் முக்தி கிடைக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இந்த தினத்தில் கண் விழித்து இருப்பது நன்மை என்று சொல்லப்படுகிறது.
இதற்கு இன்னொரு காரணம் வைகுண்ட ஏகாதசி விழா என்பது ஸ்ரீரங்கத்தை மையமாக வைத்துக் கொண்டாட கூடிய ஒரு விழாவாக உள்ளது. ஸ்ரீ ரங்கநாத பெருமாள் தன் மீது மிகுந்த பக்தி கொண்ட ஆழ்வார்களின் விண்ணப்பத்தை ஏற்று இராபத்து மற்றும் பகல் 10 என 21 நாட்கள் கண்விழித்து ஆழ்வார்கள் பாடிய திவ்ய பிரபந்தத்தை கேட்டு மகிழ்வதாக ஐதீகம்.
மேலும், இந்த 21 நாட்களும் எல்லோராலும் கண்விழிக்க முடியாது என்பதால் தான் இந்த விழாவில் மையமாக வரக்கூடிய பெருமாளுக்கு உகந்த ஏகாதசி தினத்தன்று கண் விழித்து பக்தர்களும் பெருமாளுடைய புகழை பாடுகிறார்கள்.
இவ்வாறு நாம் பாடுகின்ற பொழுது எப்படி பெருமாள் ஆழ்வார்கள் உடைய விண்ணப்பங்களை ஏற்றுக் கொண்டு மோட்சத்தை வழங்கினாரோ, அதேபோல் நம்முடைய விருப்பங்களையும் ஏற்றுக்கொண்டு பெருமாள் நமக்கு மோட்சத்தை வழங்குவார் என்பது நம்பிக்கை.
Disclaimer:
இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ள வழிபாடு மற்றும் விரத முறைகள் ஆன்மிக நம்பிக்கைகள், பாரம்பரிய நடைமுறைகளின் அடிப்படையில் பொதுத் தகவலுக்காக வழங்கப்பட்டுள்ளன. குடும்ப வழக்கம் மற்றும் கோயில் மரபுகளுக்கு ஏற்ப நடைமுறைகள் மாறுபடலாம். உடல் ஆரோக்கிய பிரச்சனை இருப்பவர்கள் விரதம் மேற்கொள்ளும் முன் மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது சிறப்பு.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |