வைகுண்ட ஏகாதசி விழா.., திருப்பதியில் நாளை ஆழ்வார் திருமஞ்சனம்
பெருமாளை வழிபடுவதற்கு உகந்த ஏகாதசி தினம் மாதந்தோறும் வந்தாலும், மார்கழி மாதத்தில் வரும் ஏகாதசி தினம் மிகவும் சிறப்பு வாய்ந்தது.
மார்கழியில் வரும் ஏகாதசி வைகுண்ட ஏகாதசி என அழைக்கப்படுகிறது.
இந்த வைகுண்ட ஏகாதசியில் பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு அந்த வழியாக பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம்.

வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, அடுத்த 10 நாட்களுக்கு திறந்து வைக்கப்படுவது வழக்கம்.
அந்தவகையில், இந்த ஆண்டு டிசம்பர் 30ஆம் திகதி முதல் ஜனவரி 8ஆம் திகதி வரையிலான 10 நாட்களுக்கு திருப்பதியில் சொர்க்கவாசல் திறந்திருக்கும்.
வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நாளை நடைபெறுகிறது.

ஆனந்தநிலையம் முதல் தங்க வாசல் வரை உள்ள சன்னதிகள், பிரசாத அறை, சுவர்கள், மேல்சுவர் உள்ளிட்ட அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டு பரிமள நீர் தெளிக்கப்படும்.
இந்நிகழ்ச்சி காலை 6 மணி முதல் 10 மணி வரை அர்ச்சகர்களால் ஆகம முறைபடி நடத்தப்படும். அதன்பின்னர் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |