மரணத்தை கணித்து சொல்லும் சிவன் கோவில்.., எங்குள்ளது தெரியுமா?
வைத்தீஸ்வரன் கோவில் என்பது தமிழ்நாட்டில் உள்ள மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற சிவாலயம் ஆகும்.
இங்கு எழுந்தருளியுள்ள சிவபெருமான் வைத்தியநாதராக (மருத்துவக் கடவுள்) அருள்பாலிக்கிறார்.
பொதுவாக வைத்தீஸ்வரன் கோவில் என்றால் அனைவருக்கும் நினைவிற்கு வருவது நாடி ஜோதிடம் தான்.
இன்று வாழும் ஒருவருடைய வாழ்க்கையில் என்ன நடக்கும் என்பதை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஓலை சுவடிகளில் எழுதி வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது.

இது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு முனிவர்கள், ரிஷிகளால் எழுதப்பட்டதாக சொல்லப்படுகிறது.
ஒருவரின் தலைவிதி எப்படி இருக்கும் என்பதை அவர் பிறப்பதற்கு முன்பே எழுதி வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
நாடி ஜோதிடத்தில் பல காண்டங்களாக பிரித்து பலன் சொல்லுவார்கள். இவற்றில் ஆயுள் காண்டம் என்ற ஒரு உள்ளது.
அதில் உங்களின் வாழ்நாளில் மரணம் எப்போது, எப்படி ஏற்படும் இருக்கும் என்பதை கூட சொல்கிறார்கள்.
அப்படி சொல்லப்படும் பலன்கள் மிகச் சரியாக, உண்மையாக இருப்பதாக பலரும் சொல்கிறார்கள்.

பல காலமாக தீராத உடல் நோய்கள் தீர ஏராளமான பக்தர்கள் இக்கோவிலுக்கு வந்து வேண்டிக் கொள்கிறார்கள்.
இக்கோவிலில் உள்ள தீர்த்தத்தில் நீராடினால் பாவங்களும், தோல் நோய்களும் நீங்குவதாக நம்பிக்கை.
இங்குள்ள குளத்தில் வெல்லத்தை கரைத்து வழிபட்டால் உடலில் ஏற்படும் கட்டிகள், தீராத பிரச்சனைகள் தீரும் என்பதும் நம்பிக்கையாக உள்ளது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |