மதுரை அலங்காநல்லூர் வெக்காளியம்மன் கோவிலில் வளைகாப்பு விழா

By Yashini Aug 04, 2025 10:12 AM GMT
Report

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் கேட்டுக்கடை பகுதியில் ஸ்ரீ வெக்காளியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது.

இந்நிலையில், ஸ்ரீ வெக்காளியம்மன் கோவிலில் ஆடி மாத உற்சவ விழாவையொட்டி வளைகாப்பு விழா நடந்தது.

இதையொட்டி சிறப்பு யாகசாலை பூஜையில் கணபதி ஹோமம் உள்ளிட்ட 16 வகை ஹோமங்கள் நடைபெற்றன.

மதுரை அலங்காநல்லூர் வெக்காளியம்மன் கோவிலில் வளைகாப்பு விழா | Valaikappu Vizha At Alanganallur Vekkaliamman

இதனைத்தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் செய்து வளைகாப்பு விழா நடைபெற்றது.

உலக மக்கள் நன்மை வேண்டி மாலையில் 108 திருவிளக்கு பூஜையும் நடந்தது.

இந்நிகழ்ச்சிகளில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

மேலும் பூஜை மலர்கள், வளையல், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட மங்கலப் பொருட்களை பெண்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.  

  

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US