வள்ளலார் சொல்லும் 42 வகை பாவங்கள்.., என்னென்ன தெரியுமா?

By Yashini Sep 01, 2025 11:04 AM GMT
Report

வள்ளலார் தமிழ்நாட்டை சேர்ந்த ஓர் இந்து சமய ஆன்மீகவாதி ஆவார்.

இராமலிங்க அடிகளார் என்று அழைக்கப்படும் இவர் தோற்றுவித்த மார்க்கத்திற்கு "சர்வ சமய சமரச சுத்த சன்மார்க்க சங்கம்" என்று பெயரிட்டார்.

சைவ சமயத்தில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்த வள்ளலார், இவர் சாதிய பாகுபாடுகளை கடுமையாகச் சாடினார்.

வடலூரில் ஜோதியாக முக்தி அடைந்த இவர், மனித குலத்தின் நல்வாழ்விற்காக பல போதனைகளை வெளியிட்டுள்ளார்.

அந்தவகையில், வள்ளலார் கூறிய 42 வகையான பாவங்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

வள்ளலார் சொல்லும் 42 வகை பாவங்கள்.., என்னென்ன தெரியுமா? | Vallalar Ramalinga Adigalar About 42 Types Of Sins

வள்ளலார் கூறும் 42 வகை பாவங்கள்

1. நல்லவர் மனத்தை நடுங்க வைப்பது.

2. வலிய வழக்கிட்டு மானம் கெடுப்பது.

3. தானம் கொடுப்போரைத் தடுத்து நிற்பது.

4. கலந்த சிநேகிதருள் கலகம் உண்டாக்குவது.

5. மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்வது.

6. குடிமக்களிடம் வரியை உயர்த்திக் கொள்ளையடிப்பது.

7. ஏழைகள் வயிறு எரியச் செய்வது.

8. தருமம் பாராது தண்டிப்பது.

9. ஒரு தலைச் சார்பாக வழக்குரைப்பது.

10. உயிர்க் கொலை செய்பவர்க்கு உபகாரம் செய்வது.

11. களவு செய்பவர்க்கு உளவுகள் சொல்வது.

12. பொருளை இச்சித்துப் பொய் சொல்வது.

13. ஆசை காட்டி மோசம் செய்வது.

14. போக்குவரத்திற்குரிய வழியை அடைப்பது.

15. வேலை வாங்கிக் கொண்டு சம்பளத்தை குறைப்பது.

16. பசித்தோர் முகத்தைப் பாராமல் இருப்பது.

17. இரப்பவர்க்குப் பிச்சை இல்லை என்பது.

18. கோள் சொல்லிக் குடும்பத்தைக் குலைப்பது.

19. நட்டாற்றில் கை நழுவுவது.

20. கலங்கி ஒளிந்தவரைக் காட்டிக் கொடுப்பது

21. கற்பிழந்தவளோடு கலந்துறைவது.

22. காவல் கொண்ட கன்னியை கற்பழிப்பது.

23. கணவன் வழி நிற்பவளைக் கற்பழிப்பது.

24. கருவைக் கலைப்பது.

25. குருவை வணங்கக் கூசி நிற்பது.

26. குருவின் காணிக்கை கொடுக்க மறுப்பது.

27. கற்றவர் தம்மிடம் கடுகடுப்போடு நடப்பது.

28. பட்சியைக் கூண்டில் பதைக்க அடைப்பது.

29. கன்றுக்குப் பாலூட்டாமல் கட்டி அடைப்பது.

30. மாமிசம் உண்டு உடல் வளர்ப்பது.

31. கல்லும் நெல்லும் கலந்து விற்பது.

32. அன்புடையவர்க்குத் துன்பம் செய்வது.

33. குடிக்கின்ற நீருள்ள குளத்தைத் தூர்ப்பது.

34. வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சத்தை அழிப்பது.

35. பகை கொண்டு அயலவர் பயிர் அழிப்பது.

36. பொது மண்டபத்தைப் போய் இடிப்பது.

37. ஆலயக் கதவை அடைத்து வைப்பது.

38. சிவனடியாரைச் சீறி வைவது.

39. தவம் செய்வோரைத் தாழ்வு சொல்வது.

40. சுத்த ஞானிகளைத் தூஷணம் செய்வது.

41. தந்தை தாய் அறிவுரைகளை தள்ளி நடப்பது.

42. தெய்வத்தை இகழ்ந்து செருக்கூறுவது.

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.  


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US