வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல் விலக சொல்லவேண்டிய வராஹி அம்மன் மந்திரம்
பொதுவாக வீடு என்பது நேர்மறை ஆற்றல் கொண்டு நிரம்பி இருக்க வேண்டும்.ஆனால் சில வீடுகளில் எதிர்பாரா விதமாக கெட்ட நேரத்தால் சில எதிர்மறை ஆற்றல் சூழ்ந்து விடும்.
அப்படியாக அந்த நேரத்தில் வீட்டில் உள்ளவர்களுக்கு ஒரு வகையான பதட்டம்,பயம்,செய்யும் காரியங்களில் தடங்கல் உண்டாகும்.உடலிலும் மனதிலும் வலிமை இழந்து காணப்படுவார்கள்.
அந்த வேளையில் நம்மை கைதூக்கி விட எத்தனை வலிமை படைத்த மனிதர்கள் இருந்தாலும் இறைவன் அருள் இருந்தால் மட்டும் நாம் மீண்டு வர முடியும்.
அப்படியாக,எதிரிகளிடம் இருந்து நம்மை காத்தருளும் வராஹி அம்மனை வழிபாடு செய்தால் நமக்கு உண்டான கஷ்டங்கள் விலகி வெற்றிகள் குவியும்.அதோடு நம்முடைய வீட்டில் எதிர்மறை ஆற்றல் மற்றும் தீய சக்திகள் விலக வாராஹி அம்மனின் சக்தி வாய்ந்த இந்த 12 நாமங்களை சொல்லி வழிபாடு செய்வது சிறந்த பலனை கொடுக்கும்.
1.ஓம் ஐம் க்ளெளம் பஞ்சமியை நமஹ.
2. ஓம் ஐம் க்ளெளம் தண்டநாதாயை நமஹ.
3. ஓம் ஐம் க்ளெளம் சங்கேதாயை நமஹ.
4. ஓம் ஐம் க்ளெளம் சமயேஸ்வரியை நமஹ.
5. ஓம் ஐம் க்ளெளம் சமயசங்கேதாயை நமஹ.
6. ஓம் ஐம் க்ளெளம் வாராஹியை நமஹ.
7. ஓம் ஐம் க்ளெளம் போத்ரிணியை நமஹ.
8. ஓம் ஐம் க்ளெளம் சிவாயை நமஹ.
9. ஓம் ஐம் க்ளெளம் வார்த்தாளியை நமஹ.
10. ஓம் ஐம் க்ளெளம் மஹாசேனாயை நமஹ.
11. ஓம் ஐம் க்ளெளம் ஆக்ஞாசக்ரேஸ்வரியை நமஹ.
12. ஓம் ஐம் க்ளெளம் அரிக்னியை நமஹ.
இந்த சக்தி வாய்ந்த வராஹி அம்மன் மந்திரத்தை வீட்டில் உங்கள் பூஜை அறையில் விளக்கு ஏற்றிய பிறகு மனதார சுவாமி முன் அமர்ந்து சொல்லி வழிபாடு செய்ய வெகு விரைவில் வீட்டில் நடக்கும் மாற்றங்களை காணமுடியும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |