காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தீர்த்தவாரி வசந்த உற்சவம்

By Yashini Jun 10, 2024 02:33 PM GMT
Report

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் கோடை காலத்தை குறிக்கும் வகையில் வசந்த உற்சவம் நடைபெற்று வருகிறது.

வசந்த உற்சவத்தின் 7 ஆம் நாளான இன்று குதிரை வாகன வீதி உலாவும், அனந்த சரஸ் திருக்குளத்தில் தீர்த்தவாரி உற்சவமும் நடைபெற உள்ளது.

தீர்த்தவாரி உற்சவத்தை யொட்டி வசந்த மண்டபத்தில் ஸ்ரீதேவி பூதேவியுடன் எழுந்தருளிய வரதராஜ பெருமாளுக்கு மஞ்சள், சந்தனம், துளசி, உள்ளிட்டவைகளால் சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டன.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தீர்த்தவாரி வசந்த உற்சவம் | Vasant Utsavam At Kanchipuram Varadaraja Perumal

மேலும், பஞ்சவர்ண மலர் மாலைகள் அணிவித்து சிறப்பு தூப தீப ஆராதனைகள் செய்யப்பட்டது.

வசந்த மண்டபத்தில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட வரதராஜ பெருமாளை தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருள செய்து மேளதாள வாத்தியங்கள் முழங்க சன்னதி வீதி, நான்கு மாடவீதியில் வீதி உலா வந்தனர்.

தங்க குதிரை வாகனத்தில் வீதி உலா வந்த வரதராஜ பெருமாளுக்கு திரளான பக்தர்கள் வழியெங்கும் கற்பூர ஆரத்தி எடுத்து தரிசனம் செய்தனர்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தீர்த்தவாரி வசந்த உற்சவம் | Vasant Utsavam At Kanchipuram Varadaraja Perumal  

இதைதொடர்ந்து கோவிலுக்கு திரும்பிய வரதராஜ பெருமாள், அனந்தசரஸ் திருக்குளத்துக்கு அருகே எழுந்தருளியதை தொடர்ந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

பின்னர் வேதங்கள் ஒலிக்க திருக்குளத்தில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. தீர்த்தவாரி உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு குளத்தில் நீராடி சாமி தரிசனம் செய்தனர்.  

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.  


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US