இந்த ஒரு செடி வீடுகளில் இருந்தால் போதும்.. சனி தோஷம் நொடியில் விலகும்
வாஸ்து என்பது நம்முடைய வீடுகளில் தொடங்கி வீடுகளில் இருக்கக்கூடிய பொருட்கள் வரை முக்கிய பங்கு வகிக்கிறது. அதாவது வீடுகளில் வளர்க்கக்கூடிய செடிகளில் கூட நாம் வாஸ்து ரீதியாக பார்க்க வேண்டிய நிலை இருக்கிறது. அப்படியாக, பெண்களும் ஆண்களும் குழந்தைகளுமே வீடுகளில் அவர்களுக்கு பிடித்த செடிகளையும் மரங்களையும் வளர்த்து அதை பார்த்து ரசிப்பதுண்டு.
அந்த வகையில் வீடுகளில் வன்னி மரம் வளர்க்கலாமா? வாஸ்து ரீதியாக சொல்லப்படுவது என்ன? அதைப் பற்றி பார்ப்போம்.
வன்னி மரம் என்பது சனிபகவானுடைய அருள் மற்றும் சிவபெருமானுடைய அருளையும் நமக்கு பெற்று கொடுக்கக்கூடிய ஒரு அற்புதம் நிறைந்த மரமாக இருக்கிறது. ஆக வன்னி மரங்களை நாம் வீடுகளில் வளர்க்கும் பொழுது நிச்சயம் வீடுகளில் நேர்மறை ஆற்றல்கள் அதிகரிப்பதோடு ஒரு நல்ல மகிழ்ச்சியான சூழலையும் அவை கொடுக்கிறது.

அப்படியாக, இந்த வன்னி மரங்களை நம் வீடுகளில் வளர்க்கும் பொழுது சில முக்கியமான விஷயங்களை பின்பற்ற வேண்டும். அதில் நாம் வன்னி மரங்களை வைக்கக்கூடிய திசை என்பது முக்கியமாக இருக்கிறது.
அதாவது வன்னி மரங்களை வீடுகளில் வளர்ப்பது என்பது சிறப்பு வாய்ந்தது என்றாலும் அதற்குரிய திசைகளில் நாம் வளர்க்கும் பொழுது தான் அந்த மரத்தை நம் வீட்டில் வளர்க்கக்கூடிய முழு பலனை பெறலாம்.
ஆக வன்னி மரங்கள் வீடுகளில் வளர்க்கும் பொழுது தெற்கு திசையில் வைத்து வளர்க்க வேண்டும். வீடுகளில் உங்களுக்கு பிடித்த எந்த இடங்களில் வைத்தாலும் இந்த தெற்கு திசை என்பது அந்த மரத்தை வைக்கக்கூடிய ஒரு உரிய திசையாக இருக்கிறது. ஆனால் இந்த மரத்தை ஒருபொழுதும் வீட்டிற்குள் வைத்து வளர்க்க கூடாது.
நல்ல காற்றோட்டமாக இருக்கக்கூடிய ஒரு சூழலில் வைத்து வளர்ப்பதே நமக்கு ஒரு நல்ல பலன்களை பெற்றுக் கொடுக்கும்.

செய்யக்கூடாதவை:
மேலும், துளசி என்பது சிவபெருமான் வழிபாட்டிற்கு உரிய ஒரு செடி அல்ல. அதனால் வீடுகளில் வன்னி மரம் வைத்திருப்பவர்களும் துளசி செடி வைத்திருப்பவர்களும் இதை இரண்டையும் அருகில் வைக்காமல் தவிர்ப்பது நல்லது. அதை போல் இந்த மரங்களை நம்முடைய காலணிகளை கழற்றி வைக்கக் கூடிய இடங்களில் வைப்பது மற்றும் அசுத்தமான நிலையில் இருக்கக்கூடிய இடங்களில் வைப்பது போன்ற விஷயங்களை தவிர்க்க வேண்டும்.
வழிபாடுகள் :
ஒருவர் ஜாதகத்தில் சனி தோஷம் அல்லது சனி திசை, ஜென்ம சனி ஏழரை சனி நடக்கும் நபர்கள் நிச்சயம் வன்னி மரத்திற்கு முன்பாக விளக்கேற்றி வழிபாடு செய்வது என்பது ஒரு நல்ல நிவாரணத்தை கொடுக்கும்.
ஆன்மீக ரீதியாக வன்னி மரம் நமக்கு ஒரு நல்ல அதிர்ஷ்டத்தை தேடி கொடுக்கக்கூடியது. ஆதலால் இதை நாம் சரியான இடங்களில் வீடுகளில் வைத்து வளர்க்கும் பொழுது நிச்சயம் அதற்குரிய பலனை நாம் பெறலாம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |