சம்பளம் உயரனுமா? இந்த வாஸ்துவால் 1 மாதத்தில் மாற்றம்
பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் நிறுவனத்தில் உங்கள் ஊதியத்தை உயர்த்த வாஸ்து சாஸ்திர குறிப்புகள் உதவும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
சம்பள உயர்வு
அலுவலகத்தில் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட மேசையில் வெள்ளி நாணயம் ஒன்றை வைப்பது நல்லது. இந்த மேசையை முடிந்தால் வடக்கு திசை பார்த்த படி வைப்பது நல்லது குபேரனின் திசையாக கருதப்படும் அந்த திசையில் உங்களுக்கு அளிக்கப்பட்ட குப்பைத் தொட்டியை வைப்பது கூடாது.

மேலும் ட்டில் வாஸ்த்து சாஸ்திரங்களை முறையாக கடைப்பிடிப்பதன் மூலம் உங்கள் வருமானத்தை பல மடங்காக அதிகரிக்க முடியும். அந்த வகையில் வீட்டில் இருக்கும் குழாயில், நீர் கசிவு இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். வீட்டை சுத்தம் செய்ய உதவும் துடைப்பத்தை அவமதிப்பது உங்கள் பொருளாதார நிலையை பாதிக்கும்.
வாஸ்து டிப்ஸ்
நிபுணர்கள் கூற்றுப்படி துடைப்பத்தை நிமிர்த்தி வைப்பது கூடாது. வீட்டின் வடகிழக்கு திசையில் வைப்பதும் கூடாது. வீட்டின் தென்மேற்கு திசையில் வையுங்கள். தினமும் காலை எழுந்தவுடன் உங்கள் உள்ளங்கையை பார்த்து, ‘கரக்ரே வாசதே லட்சுமி’ எனும் மந்திரத்தை உச்சரியுங்கள்.

தினமும் இரவு உறங்க செல்வதற்கு முன்னர், உங்கள் பணப்பையில் ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து பின் உறங்க செல்லுங்கள். வாரம் தோறும் வெள்ளிக்கிழமைகளில் மஞ்சள் துணி ஒன்றில் மஞ்சள் துண்டுகளை வைத்து முடிந்து,
உங்கள் அலுவலக மேசையில் வைத்துங்கள். வாரம் ஒரு முறை இதனை முறையாக மாற்றிவிடுங்கள். பலனை அடைய கடுமையாக உழைக்க வேண்டும் என்பதும் நினைவில் கொள்ளவேண்டிய முக்கிய தகவல்.