வாஸ்து: தவறியும் இந்த திசையில் தலை வைத்து உறங்கி விடாதீர்கள்.. காரணம் இதோ

By Sakthi Raj Apr 20, 2026 08:57 AM GMT
Report

 ஜோதிடத்தில் வாஸ்து சாஸ்திரம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் நாம் குறிப்பிட்ட சில திசைகளில் ஒரு விஷயங்கள் செய்யலாம் என்றும் சில விஷயங்களை செய்யக்கூடாதென்றும் நமக்கு அறிவுறுத்தப்படுகிறது.

அதை நாம் பின்பற்றும்பொழுது நம் வாழ்க்கை சிறப்பாக அமையும் அப்படியாக வாஸ்து ரீதியாக நாம் எந்த திசைகள் தலை வைத்து தூங்கலாம் எந்த திசையில் தூங்கக் கூடாது என்பதை பற்றி பார்ப்போம்.

வாஸ்து சாஸ்திரத்தில் நாம் உறங்கும் திசையானது நம்முடைய உடல் நலத்திற்கு மட்டுமல்லாமல் நம்முடைய மனநிலையிலும் வாழ்க்கையிலும் ஒரு ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறது. நாம் தவறான திசைகளில் உறங்கும் பொழுது மன அழுத்தம் மற்றும் வாழ்க்கையில் இழப்புகள் போன்றவை சந்திக்க நேரும்.

வாஸ்து: தவறியும் இந்த திசையில் தலை வைத்து உறங்கி விடாதீர்கள்.. காரணம் இதோ | Vastu Best Direction To Have Good Sleep And Luck

2026: ஆரம்பமாகும் கேது பார்வை.. டிசம்பர் வரை கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்

2026: ஆரம்பமாகும் கேது பார்வை.. டிசம்பர் வரை கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்

அப்படியாக, வாஸ்து சாஸ்திரப்படி உறங்குவதற்கு சரியான திசையாக தெற்கு திசை உள்ளது. நாம் உறங்கும் பொழுது தலை தெற்கு திசையிலும் கால்கள் வடக்கு திசையிலும் இருக்க வேண்டும். இந்த திசையில் நாம் உறங்கும் பொழுது உடலில் இருக்கக்கூடிய ஆற்றல் சமநிலை செய்கிறது.

அதேபோல் பூமியின் காந்தப்புலம் நம்முடைய உடலில் உள்ள ரத்த ஓட்டம் பாதிப்பதை தடுக்க உதவுகிறது. அதோடு மனம் அமைதி பெற்று ஆழ்ந்த உறக்கத்தையும் நமக்கு கொடுக்கிறது. அடுத்தபடியாக நாம் உறங்குவதற்கு சிறந்த திசையாக கிழக்கு திசை உள்ளது.

இங்கு நம்முடைய தலை கிழக்கு நோக்கியும் பாதங்கள் மேற்கு நோக்கி இருக்கும் படியாக உறங்க வேண்டும். இந்த திசையில் மாணவர்கள் மற்றும் தொழில் செய்பவர்கள் பயன்படுத்தி உறங்கும் பொழுது நல்ல பலன் கிடைக்கும்.

வாஸ்து: தவறியும் இந்த திசையில் தலை வைத்து உறங்கி விடாதீர்கள்.. காரணம் இதோ | Vastu Best Direction To Have Good Sleep And Luck

பாம்பிற்கு நாக்கு ஏன் இரண்டாகப் பிளந்து இருக்கிறது? வியப்பூட்டும் புராணக்கதை

பாம்பிற்கு நாக்கு ஏன் இரண்டாகப் பிளந்து இருக்கிறது? வியப்பூட்டும் புராணக்கதை

காரணம் கிழக்கு என்பது சூரியன் உதிக்க கூடிய திசை. இது நமக்கு நேர்மறை ஆற்றலை அதிகரித்து எண்ணங்களை தெளிவாக வைக்க உதவியாக இருக்கும். ஆனால் தவறியும் வடக்கு திசையில் நாம் உறங்கக்கூடாது. நம் வீடுகளில் இறந்தவர்களின் தலைகள் மட்டுமே வடக்கு திசையில் வைக்கப்படுகின்றன.

வடக்கு திசையில் தலை வைத்து உறங்கும் பொழுது உடலில் இருக்கின்ற காந்த ஆற்றலை அவை சீர்குலைக்கிறது. இதனால் ரத்த அழுத்தம், கடுமையான தலைவலி, மனக்குழப்பம் தூக்கமின்மை தேவையில்லாத கனவுகள் போன்றவை வரலாம்.

அதேபோல் மேற்கு திசையில் தலை வைத்து உறங்குவதும் போது சில எதிர்மறையான தாக்கங்களை கொடுக்கிறது. இவை நமக்கு சோம்பலை அதிகரித்து நம்முடைய உழைப்பை தடுக்கிறது. 

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US