வாஸ்து: கடன் தொல்லை நீங்க இந்த செடியை வீட்டின் கிழக்கு திசையில் நடுங்கள்

By Yashini Dec 14, 2024 08:50 AM GMT
Report

கடன் பிரச்சனை என்பது சிலருக்கு இருக்கும் ஒரு பெரிய பிரச்சனை.

தங்கள் வாழ்வில் சிலர் கடனை அடைப்பதற்காக கடுமையாக முயற்சி செய்வார்கள்.

ஆனால் எவ்வளவு முயன்றாலும், எவ்வளவு சம்பாதித்தாலும் கடனை அடைக்க முடியாமல், கடன் பிரச்சனையுடன் போராடிக் கொண்டிருப்பார்கள்.

அந்தவகையில், கடன் தொல்லை நீங்க பாரிஜாத செடியையை வீட்டில் நட்டால் போதும்.

வாஸ்து: கடன் தொல்லை நீங்க இந்த செடியை வீட்டின் கிழக்கு திசையில் நடுங்கள் | Vastu For Placing Parijata Plant To Attract Wealth

பாரிஜாத மலர் லட்சுமி தேவிக்கு மிகவும் விருப்பமானது. இந்தப் பூவின் மணம் எங்கெல்லாம் இருக்கிறதோ, அங்கே லட்சுமி தேவி தங்குவதாக நம்பப்படுகிறது.

எனவே பாரிஜாத செடியை வீட்டில் வைப்பதன் மூலம் ஒருவரின் பொருளாதார நிலை மேம்படும்.

அதோடு வீட்டில் இருப்பவர்களின் ஆரோக்கியமும் நன்றாக இருக்கும். மேலும், வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும்.

பாரிஜாத செடியை வீட்டின் வடக்கு அல்லது கிழக்கு திசையில் நட்டால், வீட்டின் வாஸ்து தோஷங்கள் நீங்கும்.  

வாஸ்து: கடன் தொல்லை நீங்க இந்த செடியை வீட்டின் கிழக்கு திசையில் நடுங்கள் | Vastu For Placing Parijata Plant To Attract Wealth

இச்செடியின் பூவைப் பார்த்தவுடன் வாழ்வில் நிம்மதியும், மனதுக்கு மிகுந்த திருப்தியும் கிடைக்கும்.

இந்த பாரிஜாத செடியை வீட்டில் வைப்பதால் நீண்ட நாட்களாக கிடைக்காமல் இருந்த பணம் கிடைக்கும். கடனில் இருந்து விடுபடலாம்.

மேலும், 21 பாரிஜாத மலர்களை சிவப்புத் துணியில் கட்டி லட்சுமி தேவியின் முன் வைத்து வணங்கினால் அவர்கள் எதிர்பார்த்த அனைத்தும் நடைபெறும்.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.          


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US