வாஸ்து: தவறியும் இந்த 2 சுவாமி படங்களை ஒன்றாக வைத்து விடாதீர்கள்
வாஸ்து என்பது உண்மையில் நம வாழ்க்கையில் நிறைய எதிர்மறை மற்றும் நேர்மறை தாக்கங்களை கொடுக்கக்கூடியத இருக்கிறது. அப்படியாக நம்முடைய வீடுகளில் பூஜை அறைகளை உருவாக்குவது என்பது ஒரு அழகான விஷயம் என்றாலும் அதில் நிறைய வாஸ்து தொடர்பான அம்சங்கள் நிறைந்து இருக்கிறது.
அதை நாம் கடைப்பிடித்து பூஜை அறையை உருவாக்கும் பொழுது தான் நம்முடைய வீடுகளில் நேர்மறை ஆற்றல் உண்டாகும். அந்த வகையில் நம்முடைய பூஜை அறைகளில் நமக்கு பிடித்த சுவாமி படங்கள் அல்லது சுவாமி சிலைகளை வாங்கி வைத்து வழிபாடு செய்வோம்.
அப்படியாக வாஸ்து ரீதியாக குறிப்பிட்ட சில சுவாமி படங்கள் அல்லது சுவாமி சிலைகளை அருகில் வைத்து வழிபாடு செய்ய கூடாது என்று சொல்கிறார்கள். அதை பற்றி பார்ப்போம். நம்முடைய வீடுகளில் கட்டாயமாக விநாயகர், சிவபெருமான், பார்வதி தேவி ஆகியவர்களுடைய படங்கள் அல்லது சிலைகள் வாங்கி வைத்து வழிபாடு செய்வோம்.

அப்படியாக விநாயகப் பெருமான் ஞானம் மற்றும் நமக்கு ஒரு புதிய தொடக்கத்தை வழங்குபவராக இருக்கிறார். அதுவே லக்ஷ்மி தேவியை எடுத்துக் கொண்டால் அவர்கள் செல்வதை வழங்கக் கூடிய கடவுளாக இருக்கிறார். சரஸ்வதி தேவி எடுத்துக் கொண்டால் அவர்கள் கல்விக்கு அதிபதியாகவும், கல்வியை வழங்குபவராக இருக்கிறார்கள்.
ஆக இவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு ஆற்றல்கள் கொண்டு நமக்கு அருள் புரிபவர்கள். அந்த வகையில் ஒரு அமைதியையும் ஒரு மிகப்பெரிய சக்தியையும் அருகில் வைக்கும் பொழுது நிச்சயம் அங்கு ஒரு சில குழப்பங்கள் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.
அதனால் இந்த சுவாமி படங்கள் அல்லது இந்த தெய்வங்களுடைய சிலைகளை அருகே வைக்கும் பொழுது நாம் சற்று கவனம் செலுத்துவது நன்மை அளிக்கும். மேலும் சிவபெருமானுடைய சிலை வைத்திருப்பவர்கள் சிலைக்கு முன்பு நந்தி சிலையை வைத்து வழிபாடு செய்வது நன்மை தரும். அதேபோல் நம்முடைய வீடுகளில் ஹனுமன் மற்றும் சனிபகவானை அருகே வைத்து வழிபாடு செய்யக்கூடாது.
காரணம், ஹனுமன் நமக்கு சனிபகவான் கொடுக்கக் கூடிய தாக்கங்களை குறைக்க கூடியவராக இருக்கிறார். ஆகவே இவர்கள் இருவரையும் நாம் அருகே வைத்து வழிபாடு செய்யும் பொழுது அவர்களுடைய ஆசிர்வாதம் நமக்கு கிடைப்பதில் சில தடுமாற்றம் வரலாம். ஆக இவர்கள் இருவரையும் தனி தனியே வைத்து வழிபாடு செய்தல் சிறப்பு.

மேலும் தவறியும் காளிதேவி அல்லது துர்கா தேவி படங்களை லக்ஷ்மி தேவி, சரஸ்வதி தேவி கிருஷ்ணர், விநாயகர் படங்களுக்கு அருகே வைத்து வழிபாடு செய்ய கூடாது. இவை நம்முடைய ஆற்றலில் சில தடுமாற்றங்களை கொடுக்க கூடும்.
அதேப் போல் ஒரே கடவுளுடைய சிலைகள் படங்களை பல்வேறு விதமாக வாங்கி வைத்து வழிபாடு செய்வதையும் நாம் தவிர்த்துக் கொள்வது நல்லது. காரணம் இவை கட்டாயமாக நமக்கு ஒரு நல்ல அளவில் நல்ல பலன்களை கொடுப்பதை காட்டிலும் ஒரு சில குழப்பங்களை உண்டாக்குவதற்கான நிலை அதிகம். ஒரே கடவுளுடைய படம் இரண்டு மூன்று இருக்கின்ற வேளையில் அதை வெவ்வேறு இடங்களில் வைத்து வழிபாடு செய்யலாம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |