வாஸ்து: எதிர்மறை ஆற்றல் விலக வீட்டில் கட்டாயம் வைத்திருக்க வேண்டிய பொருட்கள்
வீடு என்பது ஒரு மனிதனுக்கு மிக முக்கியமான இடம் ஆகும். அந்த வீட்டின் சூழல் மற்றும் ஆற்றல் பொறுத்தே மனிதன் அவன் செயல்பாடுகள் இருக்கிறது. வீட்டில் எதிர்மறை ஆற்றல் சூழ வீட்டில் பல தடைகள், தடுமாற்றங்கள் உண்டாகும்.
அதே நேர்மறை ஆற்றல் சூழ வீட்டில் எல்லா காரியமும் வெற்றிகரமாக அமையும். அப்படியாக, வீடுகளில் நாம் வாஸ்து ரீதியாக நேர்மறை ஆற்றலை ஈர்க்க வைத்திருக்க வேண்டிய முக்கியமான பொருட்கள் பற்றி பார்ப்போம்.
1.நம் வீடுகளில் முக்கியமான அறையாக ஹால் அமைய பெற்று இருக்கும். அங்கு தான் விருந்தினர்கள் மற்றும் குடும்ப நபர்கள் அமர்ந்து அதிக நேரம் செலவிடுவார்கள். அப்படியாக, அந்த ஹாலில் விநாயகர் படம் வைப்பது சிறந்த பலன் அளிக்கும்.
அதாவது விநாயகர் நம் மனதை சாந்தம் ஆக்கும் கடவுள். ஆக, அவர் படம் ஹாலில் இருக்க நம் மனம் அமைதி பெற்று நேர்மறை ஆற்றல் கொண்டு நிரம்பி இருக்கும்.
2.அதே போல் வீடுகளில் வாசலில் கண்ணாடியை வைப்பது வாஸ்து ரீதியாக நமக்கு நிறைய நன்மைகள் அளிக்கிறது. கண்ணாடி எதிர்மறை ஆற்றலை தடுப்பதோடு, மனிதனின் மனநிலையும் நேர்மறையாக மாற்றும் தன்மை உடையது.
3.வீடுகளில் முக்கிய சுபநிகழ்ச்சிகள், பண்டிகையின் பொழுது வாசலில் மாவிலை தோரணம் கட்டும் பழக்கம் வைத்திருப்போம். அதை நாம் பண்டிகை நாள் மட்டும் அல்லாமல் செவ்வாய் வெள்ளிக்கிழமையில் கட்ட நல்ல நேர்மறையான ஆற்றலையும், அதிர்ஷ்டத்தையும் கொண்டு வரும்.
4.ஹாலில் நாம் மனதை அமைதி செய்யும் விதமான இயற்கை படங்களை வைக்கலாம். அதை பார்க்கும் பொழுது நமக்கு பார்க்கும் போது மனதுக்கு ஆத்மதிருப்தி ஏற்படுத்தும். மேலும், இயற்க்கை படங்கள் நம்மை ஊக்குவித்து மனதிற்கு தன்மைபிக்கை கொடுக்கும்.
5.அதே போல் வீடுகளில் ஹாலில் ஒரு தட்டில் மஞ்சள், குங்குமம், விபூதி போன்ற மங்கலகரமான பொருட்களை வைத்திருப்பது நன்மை தரும். காரணம், வீட்டிற்கு வரும் பெண்களுக்கு நாம் குங்குமம் மஞ்சள் கொடுப்பது அவர்கள் மனநிறைவு கொடுப்பதோடு, அவர்களின் மகிழ்ச்சி நமக்கு நன்மையை தரும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |