வாஸ்து: சுவாமி படம் போட்ட காலண்டரை பயன்படுத்த கூடாதா?
புது வருடம் பிறந்து விட்டது. நாம் எல்லோரும் புதிய வருடத்தை நோக்கி எவ்வாறு எதிர் பார்த்து காத்திருக்கிறோமோ அதே போல் புது வருடத்தினுடைய காலண்டரை நாம் வாங்கி வீடுகளில் மாற்றுவதற்கும் ஒரு ஆவலுடன் இருப்போம்.
மேலும் இந்த காலண்டர் நிறைய வித்தியாசமான அம்சங்களில் வருகிறது. சில நேரங்களில் ஒருவர் சொந்த படத்தை கொண்டு காலண்டரை தயார் செய்து கூட பயன்படுத்தும் நிலை வந்து விட்டது. இருந்தாலும் சுவாமி படங்களை வைத்து பயன்படுத்தக்கூடிய காலண்டரை பெரும்பாலும் வாங்க விரும்புவார்கள்.
ஆனால் உண்மையில் நாம் சுவாமி பட காலண்டரை வீடுகளில் மாட்டுவது மகிழ்ச்சி என்றாலும் அந்த வருடம் முடிந்து மறுவரிடம் பிறக்கும்பொழுது அந்த காலண்டரை என்ன செய்வது என்று பலருக்கும் தெரிவதில்லை. சுவாமி படங்களாக இருப்பதால் சிலர் அதை வீடுகளில் தேக்கி வைத்து விடுவார்கள்.

உண்மையில் வாஸ்துரீதியாக பழைய விஷயங்கள் அவ்வபொழுது நாம் கழித்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்படியாக சுவாமி படங்கள் கொண்ட காலண்டர்கள் வீடுகளில் மாட்டி விட்டால் அதை அடுத்த வருடம் வரும்பொழுது என்ன செய்வது என்று பார்ப்போம்.
நம் வீடுகளில் சுவாமி படங்கள் கொண்ட காலண்டரை நீங்கள் மாட்ட விரும்பினால் கட்டாயமாக அந்த காலண்டரை கிழக்கு அல்லது வடக்கு திசையை நோக்கி மாட்டுவது நல்லது. அதைப்போல் காலண்டரை முடிந்தவரை தென் திசையில் மாட்டுவதை தவிர்த்து விடுங்கள். இது சில சமயங்களில் நமக்கு ஒரு எதிர்மறை ஆற்றலை பெற்றுக் கொடுத்து விடும்.
காலம் பொன் போன்றது என்று சொல்வார்கள். நேரம் தான் ஒரு மனிதனுடைய வாழ்க்கையை தீர்மானித்துக் கொண்டிருக்கிறது. அதாவது நொடியில் மரணம் நொடியில் ஜனனம் என்கின்ற வாக்கியத்தின் அடிப்படையில் தான் உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது.

அப்படியாக வாழ்கின்ற இந்த காலகட்டங்களில் கிடைக்கின்ற நொடி பொழுதை சரியாக பயன்படுத்திக் கொண்டு நாம் முன்னேற்ற பாதை நோக்கி சென்று விட்டோம் என்றால் வெற்றி நமதே. அதனால் பழைய நாட்களை நாம் கடந்து புதிய நாட்களை வாய்ப்புகளை தேடி செல்ல வேண்டும்.
அதனால் பழைய காலண்டரில் அழகான சுவாமி படங்கள் போட்டு இருப்பதால் அதை அகற்றி விடுவதில் நிறைய சிரமங்களை மனரீதியாக சிலர் சந்திப்பார்கள். அப்படியாக சுவாமி படம் கொண்ட காலண்டரை நீங்கள் வீடுகளில் வைத்திருக்கிறீர்கள் என்றால் அதை தண்ணீரில் ஊற வைத்து மெதுவாக கரையைச் செய்து பிறகு அதை ஓடும்நீரில் விட்டு விடுங்கள்.
முடிந்தவரை அந்த காலண்டரை குப்பை தொட்டியில் அவ்வாறே போடுவதை தவிர்ப்பது நன்மை தரும். அதை போல் சுவாமி படங்கள் கொண்ட காலண்டராக இருந்தாலும் அதை நாம் பூஜை அறையில் மாட்டி வைத்து வழிபாடு செய்யக்கூடாது.
உங்களுக்கு அந்த காலண்டரில் இருக்கக்கூடிய சுவாமி படம் மிகவும் பிடித்தமானதாக இருந்தால் அந்தப் படத்தை மட்டும் எடுத்து நீங்கள் கடைகளில் கொடுத்து பிரேம் செய்து போட்டுக் கொள்ளலாம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |