100 ஆண்டுகளுக்குப் பின் சனியின் வீட்டில் 4 கிரகங்கள் - ராஜாவாகும் 3 ராசிகள்
பிப்ரவரியில் சூரியன், புதன், செவ்வாய், சுக்கிரன் ஆகியோர் கும்ப ராசியில் ஒன்றாக இணைகின்றனர். கும்ப ராசியானது சனி பகவானின் சொந்த வீடாகும். சனி பகவானின் வீட்டில் நடக்கும் இந்த சேர்க்கை சதுர்கிரக யோகத்தை உருவாக்க இருக்கிறது. இதன் காரணமாக சில ராசிக்காரர்கள் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் பிரகாசிக்க உள்ளது.

மிதுனம்
கடினமான பணிகளையும் கூட எளிதாக முடிப்பீர்கள். தொழில் மற்றும் வணிகத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அனுபவிப்பீர்கள். சிறிய முதலீடுகள் கூட மிகப் பெரிய லாபத்தைத் தரும். அனைத்து முயற்சிகளும், உத்திகளும் மிகப்பெரிய வெற்றியைப் பெறும்.
விருச்சிகம்
பொன், பொருள், வசதிகள், ஆடம்பரங்களை அனுபவிப்பீர்கள். ரியல் எஸ்டேட் ஒப்பந்தங்களை முடிப்பீர்கள். வேலை மற்றும் தொழிலில் குறிப்பிடத்தக்க லாபத்தைப் பெறுவீர்கள். நிலுவையில் இருந்த பணிகள் அனைத்தும் முடிவடையும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியானதாக மாறும்.
கும்பம்
தன்னம்பிக்கை அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். புதிதாக முயற்சி செய்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகள் உருவாகும். திருமணமாகாதவர்களுக்கு திருமண வரன்கள் கைகூடும். தந்தை உடனான உறவு மேம்படும். தந்தை அல்லது தாய் வழியில் இருந்த பூர்வீக சொத்துக்கள் கைக்கு வந்து சேரும்.