பணப்புழக்கம் அதிகரிக்க உங்களது பர்ஸில் வைக்கக்கூடாத பொருட்கள்
வாழ்க்கைக்கு மிக முக்கியமான ஒன்று பணம், நாள் முழுவதுமே குடும்பத்துக்காக கஷ்டப்பட்டு உழைப்பதே வருமானத்திற்காக தான்.
அப்படி உழைக்கும் பணத்தை வீண் செலவு செய்யாமல் எதிர்காலத்திற்காக சேமித்து வைக்க வேண்டும் என்றே பலரும் நினைக்கிறார்கள்.
ஆனால் ஒரு சில நேரங்களில் பணம் தங்காமல் எதிர்பாராத செலவுகள் வந்த வண்ணமே இருக்கும்.
எதனால் இப்படி எனவும் யோசித்திருப்போம், இதில் கவனிக்க கூடியது உங்களது பர்ஸில் என்னென்ன இருக்கிறது என்பதை.
வாஸ்து சாஸ்திரத்தின் படி பணம் வைக்கும் உங்களது பர்ஸில் சில பொருட்களை வைத்தால் பணம் நிலைக்காது என்று கூறப்படுகிறது.
அது என்னவென்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
ஷாப்பிங் செய்து விட்டு அந்த பில்களை பர்ஸிலேயே வைத்து விடுவதன் மூலம் பில்கள் தேங்க தேங்க பணமும் தேங்கி நின்றுவிடுவதாக சொல்லப்படுகிறது.
அதுபோல், பர்ஸில் கடவுள் புகைப்படம் வைப்பது கடவுளை கோபமடைய செய்வதாகும். இதனால் செல்வம் செழிக்காமல் போய்விடுகிறது.
பர்ஸில் சாவி வைத்திருப்பது கெட்ட சகுனமாக கருதப்படுகிறது. ஏனெனில் இது கார் திருட்டு அபாயத்தை அதிகரிக்கிறது.
செல்வத்தை பெருக்க லட்சுமி படத்தையும், அவரது மனைவி புகைப்படத்தையும் பர்ஸில் வைத்து கொள்வதால் நேர்மறையான விளைவையும், பணத்தையும் அதிகரிக்கும்.
மேலும், லட்சுமி தேவியின் ஆசிர்வாதத்தை பெற வியாழன் தோறும் ஒரு அதிர்ஷ்ட நாணயம், கற்பூரம், 7 ஏலக்காய்கள், 7 கிராம்புகள் பர்ஸில் வைக்கலாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |