வாஸ்து: இந்த திசையில் பணம் வைத்தால் பொருளாதார கஷ்டமே வராதாம்

By Sakthi Raj Apr 13, 2026 06:24 AM GMT
Report

 வாஸ்து என்பது ஜோதிடத்தில் மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. வாஸ்து சரியாக இருந்தால் மட்டுமே நம்முடைய வீடுகளில் பணப்புழக்கம் குறைவின்றி கிடைக்கும். அந்த வகையில் வீடுகளில் பொருளாதாரம் நெருக்கடிகள் மற்றும் கடன் பிரச்சனை ஏற்படாமல் இருப்பதற்கு வாஸ்துரீதியாக என்ன செய்ய வேண்டும்? என்பதை பற்றி பார்ப்போம்.

வாஸ்து ரீதியாக பணத்தை வைக்க இரண்டு முக்கிய இடங்கள் இருக்கிறது. ஒன்று நம்முடைய அன்றாட தேவைகளுக்கு செலவு செய்யக்கூடிய இடமும், மற்றொன்று சேமிப்பு மற்றும் ஆபரணங்களை வைக்கக்கூடிய இடமாகும். அப்டியாக இந்த இரண்டு வகை பணத்தையும் வெவ்வேறு இடங்களில் வைத்தால் நமக்கு நன்மை உண்டாகிறது.

வாஸ்து: இந்த திசையில் பணம் வைத்தால் பொருளாதார கஷ்டமே வராதாம் | Vastu Tips To Attract Money At Home

மிகப்பெரிய செல்வந்தர் வீடுகளில் இருக்கக்கூடியவர்கள் வாஸ்து விதிகள் கவனமாக பின்பற்றுகிறார்கள். அந்த வகையில் நம்முடைய அன்றாட செலவுகளுக்கு உரிய பணத்தை வைப்பதற்கு உரிய இடமாக தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு திசை இருக்கிறது.

காய்கறிகள் பால் அல்லது பிற சமயலறை மற்றும் வீட்டு பொருட்களுக்கு தேவையான பணத்தை இந்த திசையில் வைத்தால் சிக்கனமாகவும் பெரிய அளவிலான பண இழப்புகள் ஏற்படாமலும் அவை நம்மை பாதுகாக்கிறது. குபேர திசையாக கருதப்படும் இந்த தென்கிழக்கு திசையில் கருப்பு அல்லது நீல நிறம் இருப்பது அல்லது தரையில் துளை இருப்பது போன்றவை இருக்கக் கூடாது.

இதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். அதை போல் நம்முடைய சேமிப்பு மற்றும் ஆபரணங்களுக்காக வைக்கக்கூடிய பணத்தை தென்மேற்கு திசையில் வைத்தால் நல்ல பலன் கிடைக்கும்.

வாஸ்து: இந்த திசையில் பணம் வைத்தால் பொருளாதார கஷ்டமே வராதாம் | Vastu Tips To Attract Money At Home

இங்கு நாம் பணத்தை சேமித்து வைக்கும் பொழுது நம்முடைய பொருளாதாரம் நல்ல வளர்ச்சி அடைவதோடு பண நெருக்கடிகளில் இருந்து நம்மை பாதுகாக்கிறது.

இந்த திசையில் பச்சை அல்லது நீல நிறத்தை பயன்படுத்துவது அல்லது ஏதேனும் துளை இருப்பது நம்முடைய நிதி நிலைமையை பலவீனப்படுத்த கூடும். அதனால் இதை நாம் கவனத்தில் கொண்டு செயல்பட்டால் பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்.

அதேபோல் பணத்தை வைப்பதற்கான பிற முக்கிய திசைகள் என்று எடுத்துக் கொண்டால் மேற்கு, வடக்கு, தென்மேற்கு, வடமேற்கு ஆகிய திசைகளும் நல்லதாகவே கருதப்படுகிறது. இந்த திசைகளிலும் நாம் ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து இதில் நாம் பணத்தை வைக்கலாம். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US