பற்றற்ற வாழ்க்கை என்றால் என்ன?

Lord Shiva
By Sakthi Raj Apr 24, 2024 11:05 AM GMT
Sakthi Raj

Sakthi Raj

Report

நாம் அனைவரும் கேள்வி பட்டு இருப்போம் பற்றற்று வாழ வேண்டும் என்று.ஆனால் பலரும் பற்றற்ற வாழ்க்கை என்றால் அனைத்தையும் துறந்து தனிமைக்கு செலுத்தல் என்று தவறாக புரிந்து இருக்கின்றனர்.

உண்மையில் பற்றற்று வாழ்தல் என்றால் என்ன என்பதை பார்ப்போம்.

பற்றற்று வாழ்தல் என்பது கற்றுக்கொள்ள வேண்டிய பெரிய மந்திரம் இல்லை.வாழ்க்கையின் புரிதல் அவ்வளவே.

பற்றற்ற வாழ்க்கை என்றால் என்ன? | Vazhkai Purithal Spirtual Aanmeegam Payanam

இந்த உலகத்தின் உண்மை என்பது இரண்டு மட்டுமே.ஒன்று ஜனனம் இன்னொன்று மரணம். இதில் தான் நம்மை மீறி ஒரு சக்தி இந்த உலகத்தை ஆண்டு கொண்டு இருக்கிறது என்ற உண்மையை உணரமுடியும்.

அரசனோ ஆண்டியோ இறுதி நிமிடம் என்பது ஒன்று தான்.

ஆக தனக்கு மேல் உள்ளவரை பார்த்து பொறாமை கொள்ளாமல் தனக்கு கீழ் உள்ளவரை பார்த்து இவர்களுக்கு என் வாழ்க்கை எவ்வளவோ மேல் என்று பெருமிதம் அடையாமல் வாழ வேண்டும்.

பற்றற்ற வாழ்க்கை என்றால் என்ன? | Vazhkai Purithal Spirtual Aanmeegam Payanam

எப்படி தனக்கு மேல் உள்ளவனிடம் நாம் ஒப்பிட்டு பார்க்க கூடாதோ ,கீழ் உள்ளவர்களை அவர்களின் நிலைமை வைத்து நான் பரவாயில்லை என்று எண்ணுவது பாவ செயல்.

சிலர் சொல்லுவது உண்டு, கை கால்கள் இல்லாமல் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். ஆனால், நமக்கு கடவுள் எல்லாம் கொடுத்திருக்கிறார் என்று  நினைப்பது மிக பெரிய பாவம். இந்த உலகில் பிறந்த அனைத்து உயிரும் ஒன்றுக்கொன்று உதவி செய்யவே தவிர்த்து ஒப்பிட்டு ஞானம் இல்லாமல் போவதற்கு அல்ல.

அதாவது இறைவன் ஒன்றை கொடுத்திருக்கிறான் அதை நாம் பயன்படுத்திக்கொள்ளலாமே தவிர்த்து சொந்தம் கொண்டாட முடியாது.ஆக இங்கு இருந்து பற்றற்ற வாழ்க்கையின் புரிதல் தொடங்க வேண்டும்.

பற்றற்ற வாழ்க்கை என்றால் என்ன? | Vazhkai Purithal Spirtual Aanmeegam Payanam

இறைவன் நினைத்தால் இன்று நாம் மனிதாக இருப்போம் மறு நொடி காற்றில் பறக்கும் தூசியாகலாம்.நம் அதீத உழைப்பால் கோபுரங்களே நாம் கட்டியதாக இருக்கலாம் .ஆனால் அதை சொந்தம் கொண்டாட முடியாது.

மனிதன் அடைக்க வேண்டிய முக்கியமான 5 கடன்கள்

மனிதன் அடைக்க வேண்டிய முக்கியமான 5 கடன்கள்


காலங்கள் மாறும்,மனிதர்கள் கைவசம் மாறும்.ஆக இன்று நீ! உன் கடமைகள் !இவ்வளவே வாழ்க்கை .இதில் எந்த பெருமையும் அடையாமல் ,பலனும் எதிர் பார்க்காமல் இருக்கும் நொடி, கடக்கும் நொடி அவனுடையது, என்னுடையது அன்று என்ற புரிதலே பற்றற்று உண்மையாக வாழ்தல்.

நாமும் எதற்கும் பெருமை அடையாமல் ,துன்பம் வந்தால் துவண்டு போகாமல் எல்லாம் அவன் செயல் என்று இருக்க வாழ்க்கை மேன்மை அடையும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

  

+91 44 6634 5005
Direct
+91 96001 16444
Mobile
bakthi@ibctamil.com
Email US