21 அடி நீளமுள்ள அலகு: பக்தர்கள் நேர்த்திக்கடன்
வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவில் அலகு குத்தியும், தீச்சட்டி ஏந்தியும் பக்தர்கள் தங்களது நேர்த்திகடனை செலுத்தினர்.
தேனி அருகே பிரசித்தி பெற்றது வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில், இங்கு ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான திருவிழா 7ம் திகதி தொடங்கிய நிலையில், தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டாம் நேற்று மாலை நடைபெற்ற நிலையில், நூற்றுக்கணக்கான திருநங்கைகள் அலகு குத்தியும், தீச்சட்டி எடுத்தும் ஆடி வந்து அம்மனை வழிபட்டனர்.
விழாவின் போது 21 அடி நீளமுள்ள அலகு குத்தி கோயிலுக்கு வந்து காணிக்கை செலுத்தி பக்தர்கள் வழிபட்டது குறிப்பிடத்தக்கது.