குல தெய்வத்திற்கு விளக்கு ஏற்ற உகந்த எண்ணெய் எது தெரியுமா?
இந்துவாக பிறந்த அனைவரது வீட்டிலும் விளக்கு ஏற்றி கடவுளை வழிபாடு செய்வது என்பது சாஸ்திரத்தில் ஒன்று.அதில் நாம் ஏற்றும் விளக்கிற்கு ஒவ்வொரு நற்பலன்கள் இருக்கிறது.
அதே போல் நாம் விளக்கிற்கு போடும் ஒவ்வொரு திரியிலும் நாம் விளக்கு போடும் ஒவ்வொரு தெய்வங்களுக்கும் ஒரு நற்பலன்கள் இருக்கிறது.அதை பற்றி பார்ப்போம்.
விளக்கேற்ற உகந்த திரிகள்
பஞ்சு திரி நல்லதே நடக்கும்.
தாமரை தண்டு திரி முன் ஜென்ம பாவம் விலகும்.
வாழைத்தண்டு திரி பிதுர் சாபம் நீங்கும்.மன சாந்தி ஏற்படும்.
வெள்ளெருக்கு பட்டை திரி நீண்ட ஆயுள் உண்டாகும்.தொழில் விருத்தி ஏற்படும்.
புது மஞ்சள் துண்டால் செய்யப்பட்ட திரி தேவியின் அருள் கிடைக்கும்.
புது வெள்ளைத்துணி திரி செய்வினை தோஷங்கள் நீங்கும்.
குத்து விளக்கு முகம்
ஒரு முகம் ஏற்றினால் குடும்பம் வளம் பெரும்.
இரண்டு முகம் ஏற்றினால் குடும்ப ஒற்றுமை பெருகும்.
நான்கு முகம் ஏற்றினால் பசு ,பூமி ,செல்வம் கிட்டும்.
5 முகம் ஏற்றினால் சகல நலன்களும் கிட்டும்.
3 முகம் ஏற்ற கூடாது.
தீப எண்ணெய்
கணபதிக்கு நெய் தீபம்
குலதெய்வத்துக்கு வேப்பெண்ணை ,இலுப்பண்ணை தீபம்.
மகாலட்சுமிக்கு பசு நெய் தீபம்.
நாராயணனுக்கு நல்லெண்ணெய் தீபம்.
ருத்ரருக்கு இலுப்பண்ணை தீபம்.
பராசக்திக்கு பசு நெய் , விளக்கெண்ணெய்.
மாரியம்மனுக்கு இலுப்பெண்ணை கலந்த எண்ணெய் தீபம்.
கடலெண்ணெய், கடுகு எண்ணெய், பாமாயில், சூரியகாந்தி போன்றவற்றை தெய்வ தீபத்திற்கு பயன்படுத்தக் கூடாது.
தீப எண்ணெய் பலன் பசு நெய் தீபம் கிரக தோஷம் விலகும்.
ஆமணக்கு எண்ணெய் தீபம் உறவினர்கள் ஒற்றுமை உண்டாகும்.
வேப்பெண்ணெய் தீபம் உற்றார் உறவினர் மூலம் உதவி கிடைக்கும்.
நல்லெண்ணெய் தீபம் நவகிரக பீடை விலகும்.
கலப்பு எண்ணெய் (கடலெண்ணெய் தவிர்க்கவும் )சகல பீடைகளும் அகலும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |