100 ஆண்டு பழமை கருப்பண்ணசுவாமி கோயிலுக்கு 12 ஆண்டுகள் பிறகு கும்பாபிஷேகம்
பரமக்குடியில் பிரசித்தி பெற்ற கருப்பண்ணஸ்வாமி கோயில் இருக்கிறது.இக்கோயில் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது.இக்கோவிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது.
அதில் ஏராளமான பக்தர்கள் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டு புனித நீரினை தெளித்து சுவாமி தரிசனம் செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் மிகவும் பிரசித்தி பெற்றாக இருந்து வருகிறது.
வேலங்குடி ஸ்ரீ கருப்பண்ணசுவாமி கோவில். 12 ஆண்டுகள் பிறகு கும்பாபிஷேகம் நடப்பதால் கும்பாபிஷேகத்திற்காக யாகசாலை பூஜைகள் 15-ம் தேதி தொடங்கியது.
இதையடுத்து, கருப்பணசுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வேத மந்திரங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் கலசங்களில் புனித நீரினை கும்பத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் மிக விமர்சையாக நடைபெற்றது.
இதன்பின் கருப்பணசுவாமிக்கு அலங்காரம் செய்து சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவில் பரமக்குடி நகரில் உள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீரினை தெளித்து சுவாமி தரிசனம் செய்து சென்றனர்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |