அட்சய திருதியையில் மாளவ்ய ராஜயோகம் : டபுள் ஜாக்பாட் இந்த 3 ராசிகளுக்கு தான்!
அட்சய திருதியை இந்த ஆண்டு ஏப்ரல் 19 ஆம் திகதி கொண்டாடப்படுகின்றது.ஜோதிட ரீதியாக இந்த அட்சய திருதியை நாளானது மிகுந்த முக்கியத்துவம் கொண்ட மங்களகரமாக நாளாக பார்க்கப்படுகின்றது.
இந்த நாளில் வாங்கும் பொருட்கள் வருடம் முழுவதும் பெருக்கத்தை கொடுக்கும் என நம்பப்படுகின்றது.

இந்த ஆண்டு அட்சய திருதியை நாளில் சுக்கிரன் சொந்த ராசியில் பெயர்ச்சியாவதால் சக்தி வாய்ந்த மாளவ்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. அதனால் உச்சகட்ட சாதக பலன்களை அனுபவிக்கப்போகும் ராசியினர் யார் யார் என பார்க்கலாம்.

மிதுனம் - மிதுன ராசியின் 12 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் மாளவ்ய ராஜயோகத்தை உருவாக்குவதால், இந்த ராசியினரின் வாழ்க்கையில் பல்வேறு வழிகளிலும் சாதக பலன்கள் ஏற்பட போகின்றது.
குறிப்பாக தொழில் ரீதியில் இவர்களுக்கு அமோக முன்னேற்றம் ஏற்படப்போகின்றது. சுக்கிரனின் ஆசியால் முன்னைய முதலீடுகளில் இருந்து பெரிய தொகை லாபம் கிடைப்பதற்கு வாய்ப்புள்ளது.
அட்சய திருதியை நாளில் இந்த யோகம் உருவாவது மேலும் கூடுதல் சிறப்பை கொடுக்கப்போகின்றது.

சிம்மம் - சிம்ம ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் சென்று மாளவ்ய ராஜயோகத்தை உருவாக்குவதால், இவர்களின் நிதி நிலையில் எதிர்பாரத அளவுக்கு ஏற்றம் உண்டாகும்.
இதனால் இந்த ராசிக்காரர்கள் தொழில் வாழ்க்கையில் சாதக மாற்றங்களை அனுபவிக்கப் போகின்றார்கள்.
பணியிடத்தில் சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. புதிய தொழிலை தொடங்க வேண்டும் என நீண்ட நாட்களாக போராடி வந்தவர்களுக்கு சுக்கிரன் ஆசியால் தொட்டதெல்லாம் பொன்னாகும்.

ரிஷபம் - ரிஷப ராசியின் முதல் வீட்டிற்கு சுக்கிரன் சென்று மாளவ்ய ராஜயோகத்தை உருவாக்குவதால் இதுவரை இல்லாத அளவுக்கு ஆடம்பர வாழ்க்கையை அனுபவிக்கும் யோகம் இவர்கள் உண்டாகும்.
ரிஷப ராசியினர் சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் என்பதால் இவர்ளுக்கு இந்த அட்சய திருதியை பெரும் அதிர்ஷ்டத்தை பெற்றுத்தரப்போகின்றது.
பல்வேறு வழிகளிலும் வருமானம் கிடைப்பதற்கான வழிகள் திறக்கும். இவர்களின் ராசியில் சனியும் லாப ஸ்தானத்தில் இருப்பதால் இந்த ராஜயோகம் இவர்களுக்கு நிச்சயம் இரட்டிப்பு பலன்களை கொடுக்கும்.