சுக்கிரன் -சந்திரன் அரிய சேர்க்கை : இந்த 3 ராசிகளுக்கு இனி பொற்காலம் தான்!
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில், கிரகங்கள் அவ்வப்போது தங்களின் ராசி மற்றும் நட்சத்திர நிலைகளை மாற்றிக்கொண்டே இருக்கின்றன. இந்த கிரகப் பெயர்ச்சிகளின் போது, அவை மற்ற கிரகங்களுடன் இணைந்து பல்வேறு சக்திவாய்ந்த யோகங்களை உருவாக்குகின்றன.
இந்த யோகங்கள் 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துவதால், மனிதர்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் மற்றும் முன்னேற்றங்களை உருவாக்கும் என ஜோதிட ரீதியில் பெரிதும் நம்பப்படுகின்றது.

அந்த வகையில், ஜூன் 17 ஆம் தேதியான இன்று ஜோதிட ரீதியாக மிகவும் சிறப்புமிக்க நாளாகக் கருதப்படுகிறது. இன்று சுக்கிரன் மற்றும் சந்திரன் ஆகிய இரண்டு முக்கிய கிரகங்கள் கடக ராசியில் ஒன்றிணைவதன் மூலம் அரிய மற்றும் மங்களகரமான ‘கலாத்மகா யோகம்’ உருவாகிறது.
சுக்கிரன் செல்வம், வசதி, காதல் மற்றும் அழகின் காரகனாகக் கருதப்படுகிறார். அதேசமயம், சந்திரன் மனநிலை, உணர்வுகள் மற்றும் மகிழ்ச்சியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.
எனவே, இந்த இரு கிரகங்களின் இணைவு அனைத்து ராசிக்காரர்களுக்கும் சாதகமான பலன்களை வழங்கினாலும், சில ராசியினருக்கு விசேஷ அதிர்ஷ்டத்தையும் முன்னேற்றத்தையும் அளிக்கப் போகிறது.அந்த அதிர்ஷ்ட ராசிகள் குறித்து இங்கே பார்க்கலாம்.
கன்னி

கலாத்மகா யோகத்தின் தாக்கத்தால் கன்னி ராசிக்காரர்களின் வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் உருவாகும் காலம் தொடங்குகிறது.
மனநிம்மதியும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் ஒற்றுமை மற்றும் இனிமை மேம்படும்.
கடந்த காலத்தில் மனவருத்தம் அளித்தவர்கள் கூட சமரச மனப்பான்மையுடன் அணுகும் வாய்ப்பு உள்ளது. நீண்ட நாட்களாக இருந்து வந்த நிதிச் சிக்கல்கள் குறைந்து, பொருளாதார நிலை வலுப்பெறும்.
மிதுனம்

இந்த யோகத்தின் அருளால் மிதுன ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பல சாதகமான திருப்பங்கள் ஏற்படப் போகின்றது.
அவர்களின் புத்திசாலித்தனமான அணுகுமுறை வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் வழிவகுக்கும். செயல்திறன் அதிகரிப்பதால் கடினமான சூழ்நிலைகளையும் திறம்பட சமாளிக்க முடியும்.
தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் முன்னேற்றத்துடன் பொருளாதார ஆதாயங்களும் கிடைக்கும் யோகம் காணப்படுகின்றது.
கடகம்

இந்த யோகம் கடக ராசியின் லக்னத்தில் உருவாகுவதால், அதன் பலன்களை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு இவர்களுக்கு அதிகம்.
வேலை மற்றும் வணிகத் துறைகளில் சிறப்பான முன்னேற்றமும் வெற்றியும் கிடைக்கலாம். வருமானம் உயர்ந்து, நிதி நிலை குறிப்பிடத்தக்க அளவில் மேம்படும்.
சுக்கிரனின் சாதகமான தாக்கத்தால் தன்னம்பிக்கை மற்றும் உற்சாகம் அதிகரிக்கும். இதன் மூலம் புதிய முயற்சிகளை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கான வாய்ப்புகள் தானாகவே உருவாகும்.