வெற்றியை தரும் விஜயதசமி வழிபாடு
இன்று நவராத்திரி 10ஆம் நாள்.அன்றைய தினத்தில் அம்பிகையின் வெற்றியை விஜய தசமி என்றும்,ராமனின் வெற்றியை தசரா விழாவாகவும் கோலாகலமாக கொண்டாடப்படுகின்றது. மேலும் வெற்றிக்குரிய விழாவாக இந்த விஜயதசமி விழா பார்க்கப்படுகிறது.அதை பற்றி பார்ப்போம்.
நவராத்திரி பத்தாம் நாள் மிகவும் அதிர்ஷ்ட நாளாக பார்க்கப்படுகிறது.இன்றைய நாளில் ஆரம்பிக்கும் எந்த ஒரு காரியமும் நமக்கு வெற்றியை மட்டும் சேர்க்கும் என்பது நம்பிக்கை. அன்றைய தினத்தில் தான் குழந்தைகளுக்கு வித்யா உபதேசம் எனும் கல்வி கற்கத் தொடங்கும் அற்புத மான நாளாக கொண்டாடுவார்கள்.
குழந்தைகளின் கல்வி தொடங்க இந்த நாள் முக்கியமாக பார்க்கப்படுகிறது.ஆதலால் பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளை முதன் முதலில் பள்ளியில் சேர்க்க இந்த நாளை தேர்வு செய்கின்றனர்.மேலும் சரஸ்வதி பூஜை அன்று வழிபாட்டிற்கு வைத்த புத்தகத்தை விஜயதசமி நாளில் எடுத்து படிப்பதும் பிள்ளைகளுக்கும் நல்ல தொடக்கமாக இருக்கும்.
ஒரு முறை பிரம்மாவை நோக்கி கடும் தவம் செய்த மகிஷன் என்னும் அசுரன், தனக்கு அழிவு நேர்ந்தால் ஒருபெண்ணால் மட்டுமே நிகழ வேண்டும் என்ற வரத்தைப் பெற்றான்.அவன் தனக்கு அழிவே கிடையாது என ஆணவம் கொண்டவனாக இருந்தான்.
தேவலோகத்தின் மீது போர் தொடுத்து தேவர்களைத் துன்புறுத்தினான். அவனுடைய துன்பம் பொறுக்காமல் தேவர்கள் அனைவரும் பராசக்தியிடம் முறையிட்டனர். அவர்களின் துன்பம் தீர்க்க எண்ணிய தேவி, உக்ரரூபம் கொண்டாள்.
அதற்கு மும்மூர்த்திகளும் தங்களது அம்சத்தையும் அவளுக்கு அளித்து உதவினர். மகிஷனுடன் பராசக்தி தேவி போரிட்டாள்.மிகவும் சக்தி வாய்ந்த தேவி அவனை தன்னுடைய சூலத்தை வீசிக்கொன்றாள். மகிஷனை வதம் செய்ததால் மகிஷாசுரமர்த்தினி என்ற பெயர் பெற்றாள்.
அந்த வெற்றித்திருநாளையே விஜயதசமியாகக் கொண்டாடுகிறோம். இந்நாளில் அம்பாள் கோயிலுக்குச் சென்று வழிபட வேண்டிய வரங்கள் கிடைப்பதோடு எதிரிகளின் தொல்லை விலகும். அப்படியாக அம்பிகையின் வெற்றியை கொண்டாடவும் விதமாக விஜய தசமியும் ராமனின் வெற்றியை தசரா விழாவாகவும் கோலாகலமாக கொண்டாடப்படுகின்றது.
நவராத்திரி விழாவானது மனிதனுக்கு தக்க பாடத்தை கற்றுக்கொடும் வகையில் அமைய பெற்று இருக்கிறது.அதாவது வாழ்க்கையில் தடைகள்,தடங்கல்,போராட்டம் மிகுந்தது தான் வாழ்க்கை.
அதை போராடி ஜெயிக்க வேண்டும் என்று உணர்த்தும் வகையில் அமைந்து உள்ளது.ஆதலால் மனிதன் எதற்கும் அஞ்சாமல் தயங்காமல் துர்கை வழிபாட்டை மேற்கொண்டு வாழ்க்கையில் வெற்றி பெறுவோமாக.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |