விளக்கேற்றிய திரிகளை என்ன செய்ய வேண்டும்?

By Sakthi Raj Jun 13, 2024 09:30 AM GMT
Report

நாம் தினமும் காலையிலும் மாலையிலும் வீட்டில விளக்கேற்றுவது உண்டு.அப்படியாக வீடுகளில்.5 எண்ணெய் கலந்த எண்ணெய்யையோ அல்லது வெறும் நல்லெண்ணெய்யையோ அல்லது பசும் நெய்யையோ வைத்து தீபம் ஏற்றுவோம்.

பஞ்சு திரியை கொண்டுதான் விளக்கேற்ற வேண்டும். எப்போதும் விளக்கானது கிழக்கு நோக்கியோ மேற்கு நோக்கியோ ஏற்ற வேண்டும்.

இந்த திரியும் பஞ்சு திரியாக இருத்தல் வேண்டும். தீபம் ஏற்றினால் அது திரி முழுவதும் எரிய கூடாது என்பார்கள்.

விளக்கேற்றிய திரிகளை என்ன செய்ய வேண்டும்? | Vilakettriya Thiriyai Enna Seiya Vendum Homebakthi

எனவே தீபம் ஏற்றியதும் சில மணி நேரம் எரியவிட்டுவிட்டு பிறகு குளிர வைக்க வேண்டும்.சிலர் விளக்குக்கு போடுகின்ற திரியை வாரம் ஒரு முறை மாற்றுவார்கள் சிலர் மூன்று நாள் ஒரு முறை மாற்றுவார்கள்.

ஆனால் நம்மில் பலருக்கும் நாம் மாற்றிய அந்த திரியை என்ன செய்வது என்று தெரியாது.அதை எடுத்து குப்பையில் போடுவது உண்டு.

தினமும் திரியை மாற்றுபவர்களாக இருந்தாலும், அல்லது வாரம் ஒரு முறை மாற்றினாலும் உபயோகித்த திரிகளை ஒரு சிறிய பாத்திரத்தில் சேர்த்துவைத்து கொள்ள வேண்டும்.

கொஞ்சம் திரிகள் சேர்ந்ததும் வீட்டில் இருக்கும் அனைவரையும் கிழக்கு முகமாகப் பார்த்து உட்கார வைத்து இரவு தூங்க போகும் முன் சேகரித்து வைத்த அந்த திரிகளைத் தூபக் காலில் போட்டுக் கொள்ள வேண்டும்.

பின்னர் அப்படியே அனைவரையும் சேர்த்து வலமிருந்து இடமாக மும்முறை மற்றும் இடமிருந்து வலமாக மும்முறை திருஷ்டி சுற்ற வேண்டும்.

சனி தோஷம் நீக்கும் சக்தி வாய்ந்த மந்திரம்

சனி தோஷம் நீக்கும் சக்தி வாய்ந்த மந்திரம்


திருஷ்டி எடுத்து முடிந்ததும் வீட்டு வாசலில் வைத்து அதனை எரித்து விட வேண்டும். திரிகள் கருகி கரியாகி முடிந்ததும் அதனை கால் படாத இடத்தில் போட்டு விட வேண்டும்.

இப்படி செய்யும் பொழுது வீட்டில் இருக்கும் துஷ்ட சக்திகள் அனைத்தும் இந்த நெருப்பில் பட்டு எரிந்து விடும்.

அப்பொழுது நம்மை சுற்றி உள்ள எதிர்மறை ஆற்றல் இருந்தால் அது அழிந்து நேர்மறை ஆற்றல் பிறக்கும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US