தீபம் ஏற்றினால் சாபம் நீங்குமா ?
தீபம் இறைவனின் வடிமாக போற்றப்படுகிறது. மேலும் நாம் எந்த அளவிற்கு தீபத்தை மனதார வழிபாடு செய்கின்றமோ அந்த அளவிற்கு நாம் இறைவனை நெருங்க முடியும். அதே போல் தினமும் நாம் விளக்கு ஏற்றி வழிபாடு செய்யும் பொழுது நாம் இறைவனை முழுமையாக உணரமுடிடியும் என்கிறார்கள்.
அதோடு, காலம் காலமாக மனிதன் சந்திக்கும் சிக்கல்களில் மிக பெரிய சிக்கலாக பிற மனிதன் அவனுக்கு கொடுக்கும் சாபம் இருக்கிறது. அவ்வாறு எவர் ஒருவர் சாபம் பெற்று துன்பப்படுகிறார்களோ அவர்கள் இறைவனுக்கு தீபம் ஏற்றுவதால் அவர்களின் சாபம் நீங்குகிறது என்கிறது சாஸ்திரங்கள். அதை பற்றி பார்ப்போம்.
நாம் சில ஊர்களில் சில கோயில்களை பெரிய பராமரிப்பு இன்றி இருப்பதை பார்க்க முடியும். அவ்வாறான கோயில்களுக்கு சென்று சுத்தம் செய்து நாம் அங்கு விளக்கு ஏற்றி வழிபாடு செய்தால் நமக்கு பித்ருக்களால் ஏற்பட்ட தோஷங்களும், பிறரால் ஏற்பட்ட சாபமும் விலகுகிறது.
அதே போல், வறுமையால் துன்பப்படும் குழைந்தைகளுக்கு உணவு வழங்குவது, பசு மாட்டிற்கு பூஜை செய்வது, வேதம் அறிந்த பெரியோர்களின் ஆசியைப் பெறுவது, ஆதரவற்று இறந்தவர்களுக்கு இறுதி சடங்குகள் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபடும் பொழுது நமக்கு மகத்தான புண்ணியங்கள் சேர்வதோடு, நமக்கு ஏற்பட்ட தோஷங்களும் சாபங்களும் விலகுகிறது.
ஆதலால், துன்பம் என்று வரும் பொழுது மனம் உடைந்து போகாமல் கோயில்களுக்கு சென்று வார வாரம் இறைவழிபாடு செய்து விளக்குகள் ஏற்றி வழிபாடு செய்ய நம்முடைய துன்பங்கள் முற்றிலுமாக விலகுவதை நாம் பார்க்க முடியும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |