தீபம் ஏற்ற எந்தத் திரியை பயன்படுத்த வேண்டும்?

By Sakthi Raj Apr 29, 2024 10:54 AM GMT
Report

வீட்டில் விளக்கேற்றுவது மிகவும் மங்கலகரமான விஷயமாகும். தினமும் வீட்டில் காலை, மாலை வேளைகளில் விளக்கேற்றுவது பல நல்ல பலன்களைக் கொடுக்கும்.

அப்படி விளக்கு ஏற்றுவதில் பல விஷயங்கள் அடங்கியிருக்கின்றன. தீபமேற்ற எந்தத் திரியை பயன்படுத்த வேண்டும், எந்த எண்ணெய் உபயோகிக்க வேண்டும் என்பதைப் பொறுத்து அதன் பலன்களும் மாறுபடும். இனி, எந்தத் திரியை பயன்படுத்தி தீபமேற்ற என்ன பலன் கிடைக்கும் என்பதை  பார்க்கலாம்.

தீபம் ஏற்ற எந்தத் திரியை பயன்படுத்த வேண்டும்? | Villaku Agalvillaku Villakuthiri Palanagal

பஞ்சு திரி விளக்கு

தூய இலவம் பஞ்சு திரியினால் தீபம் ஏற்றுவதால் வாழ்க்கையில் சுகபோகத்துடன் வாழலாம். வீட்டில் மங்கலம் நிலைக்கும். தெய்வ குற்றம், பித்ரு சாபம் ஆகியவற்றைப் போக்கும்.

தாமரைத்தண்டு திரி விளக்கு

தாமரைத்தண்டு திரி போட்டு தீபம் ஏற்றுவதால் முன்ஜன்ம பாவம் நீங்கும், தெய்வக் குற்றம் இருந்தால் நீங்கும், குலதெய்வ அருள் கிடைக்கும், செய்வினை கோளாறுகள் இருந்தால் நீங்கும். மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும். இந்தத் திரி தீபத்தை வெள்ளிக்கிழமைகளில் ஏற்றுவது சிறப்பு.

வெள்ளை எருக்கன் திரி விளக்கு

இந்தத் திரியை தீபம் ஏற்றப் பயன்படுத்துவதால், வீட்டில் செல்வம் தங்கும், விநாயகப் பெருமானின் பூரண அருள் கிட்டும், செய்வினை கோளாறுகள் நீங்கும், தீவினைகள் வீட்டிற்குள் வராது, கெட்ட கனவுகள் வராது, வீட்டிற்குள் நச்சுக்கிருமிகள் அண்டாது.

தீபம் ஏற்ற எந்தத் திரியை பயன்படுத்த வேண்டும்? | Villaku Agalvillaku Villakuthiri Palanagal

சிவப்பு திரி விளக்கு

வீட்டில் சிவப்பு திரி போட்டு விளக்கு ஏற்றினால், திருமணத்தடை நீங்கும், புத்திர பாக்கியம் கிட்டும். வீட்டிற்குள் சண்டை சச்சரவுகள் நீங்கும். குறிப்பாக கணவன், மனைவி பிரச்னை இருந்தால் சிவப்பு திரி போட்டு தீபம் ஏற்றுவது நல்லது. நோயில் சிக்கித் தவிப்பவர்கள் சிவப்பு திரி போட்டு தீபம் ஏற்றினால், மருத்துவமனை செலவுகள் குறையும், நோயிலிருந்து படிப்படியாக விலகி ஆரோக்கியம் கிட்டும்.

பன்றியால் எழுந்த தஞ்சை பெரிய கோயில்- வரலாற்றில் நடந்த அதிசயம் தெரியுமா?

பன்றியால் எழுந்த தஞ்சை பெரிய கோயில்- வரலாற்றில் நடந்த அதிசயம் தெரியுமா?


மஞ்சள் திரி விளக்கு

மஞ்சள் திரி போட்டு விளக்கு ஏற்றுவதால், குடும்பம் ஒற்றுமையாக இருக்கும், கணவன் மனைவி ஒற்றுமை கூடும், இல்லறம் செழிப்பாக இருக்கும். வெள்ளிக்கிழமையன்று மஞ்சள் திரியை அம்பிகை படத்திற்கு முன்னால் ஏற்றுவது சிறப்பாகும். மஞ்சள் திரியில் விளக்கு ஏற்றும் போது பஞ்ச தீப எண்ணெய்யில் விளக்கு ஏற்றினால் கூடுதல் பலன் கிடைக்கும்.

வெள்ளை திரி விளக்கு

இது வெள்ளை நூலால் செய்யப்பட்டது. வெள்ளை திரியை கொண்டு விளக்கு ஏற்றினால், வீடு சுபிட்சமாகவும், குடும்பம் நலமாகவும், படிப்பு, வேலை ஆகியவற்றில் வெற்றி பெற வெள்ளை திரி விளக்கேற்றுவது நல்லது.

தீபம் ஏற்ற எந்தத் திரியை பயன்படுத்த வேண்டும்? | Villaku Agalvillaku Villakuthiri Palanagal

வாழைத்தண்டு திரி விளக்கு

வாழைத்தண்டு திரி கொண்டு விளக்கு ஏற்றினால் வீட்டில் அமைதி உண்டாகும், சாந்தம் நிலவும். குடும்பத்தில் இருக்கும் குலதெய்வ சாபங்கள் நீங்கும், பித்ரு சாபம் நீங்கும், குழந்தை வரம் கிட்டும்.

பச்சை நிற திரி விளக்கு

பச்சை நிற திரி விளக்கை ஏற்றுவதால், கடன் தொல்லை நீங்கும், வீட்டில் செல்வம் பெரும், செல்வ செழிப்பிற்கான வழிகள் தானாகவே பிறக்கும், சமுதாயத்தில் மதிப்பு கிட்டும், பச்சை திரி குபேரனுக்கு உரியதாகும்.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US