விநாயகர் சதுர்த்தி: வீட்டில் சிலை வாங்கி வைக்க உகந்த நேரம் எது?
இந்து மத மக்கள் பிள்ளையாரை முதன்மை தெய்வமாக கொண்டாடுகிறார்கள்.
அந்தவகையில், இந்த ஆண்டு, விநாயகர் சதுர்த்தி ஆகஸ்ட் 27, 2024 புதன்கிழமை கொண்டாடப்படுகிறது.
விநாயகர் சதுர்த்தி அன்று பலரும் விநாயகர் சிலையை வாங்கி அதனை வீட்டில் வைத்து பூஜை செய்து வழிபடுவார்கள்.
ஆகஸ்ட் 26ஆம் திகதி இன்று பகல் 02.22 மணிக்கு துவங்கி, ஆகஸ்ட் 27ஆம் திகதி நாளை மாலை 03.52 வரை சதுர்த்தி திதி உள்ளது.
அந்தவகையில், விநாயகர் சிலை வாங்க மற்றும் பூஜைக்கு உகந்த நேரம் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
விநாயகர் சதுர்த்தி அன்று புதிதாக மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலையை வாங்கி வந்து வைத்து வழிபடுவது வழக்கம்.
அதன்படி, இன்று மாலை 4.50 முதல் 5.50 வரை அல்லது மாலை 6.30 முதல் இரவு 08.30 வரையிலான நேரத்தில் விநாயகர் சிலையை வாங்கி வைக்கலாம்.
விநாயகர் வாங்கிய பின்பு ஆகஸ்ட் 27ஆம் திகதியன்று காலை 6 மணி முதல் 7.20 வரையிலான நேரத்தில் வழிபடலாம்.
விநாயகருக்கு படையலிட்டு ஆகஸ்ட் 27ஆம் தேதி பகல் 1.35 முதல் 2 வரையிலான நேரத்தில் படையல் போட்டு வழிபடலாம்.
மேலும், மாலையில் வழிபடும் வழக்கம் உள்ளவர்கள் ஆகஸ்ட் 27ஆம் திகதி மாலை 6.10 மணிக்கு மேல் வழிபடலாம்.
பின்னர் மூன்றாம் நாளான ஆகஸ்ட் 28ஆம் திகதி வியாழக்கிழமை அன்று விநாயகரை எடுத்துச் சென்று கரைக்கலாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







