வைகாசி விசாகம் அன்று பாட வேண்டிய பாடல்
வைகாசி விசாகம் முருகப்பெருமான் உதித்த நட்சத்திரம். வைகாசி மாதம் வரும் விசாக நாளன்று முருகனை வழிபடுவது மிகவும் விஷேசம்.
வைகாசி வைகாசி மாத முழு நிலவு நாளன்று ஆறு குழந்தைகளாக அவதரித்த முருகன், ஆறுமுகன் என்று பெயர் பெற்றார்.
இந்த நாளன்று பலரும் விரதம் இருந்து முருகனை வழிபடுவார்கள். இவ்வாறு வழிபடும் போது முருகனுக்கு உரிய மந்திரங்கள், ஸ்லோகம், பாடல் போன்றவற்றை சொல்லி முருகனின் முழு அருளையும் பெறலாம்.
அப்படியாக குழந்தை பாக்கியத்திற்காக கோவில் கோவிலாக ஏறி இறங்கும் தம்பதியினர் வைகாசி விசாகம் முருகன் பிறந்த நாள் அன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட்டு இந்த பாடினால் குழந்தை பாக்கியம் உடனே கிடைக்கும்.
கனிகேட்ட வேலவனே!
பொய்பேசும் உலகத்தில் புகழ்பேச வைத்திடுவாய்!
நெய் தீபம் ஏற்றி நேரில் உனை வழிபட்டோம்!
வைகாசி விசாகமன்று வரம் தருவாய் கந்த வேலனே
என்று பாடி விரதம் இருப்பது மிகுந்த புண்ணிய பலன்களை தரும்.
அன்றைய தினம் அதிகாலையில் குளித்துவிட்டு, இஷ்ட தெய்வம் மற்றும் குல தெய்வத்தோடு குரு பகவானையும் மனதில் நினைத்து தியானித்து விரதத்தைத் தொடங்கலாம்.
வீட்டின் பூஜை அறையில் உள்ள முருகப்பெருமான் படத்தை அலங்கரித்து, வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய் ஆகியவற்றை நைவேத்தியம் செய்யலாம்.
வீட்டின் பூஜை அறையில் அமர்ந்து வேல் விருத்தம், சண்முக கவசம், கந்தகுரு கவசம், கந்த சஷ்டி கவசம் போன்றவற்றை சொல்லி முருகனை வணங்க வேண்டும்.
ஒருவர் வைகாசி விசாகத்தன்று விரதம் இருப்பதால், சகல சவுபாக்கியங்களும் கிடைக்கப்பெறுவார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |