தீராத துன்பம் தீருவதற்கு முருகர் வழிபாடு
முருகருக்கு உரிய நட்சத்திர நாளில் முருகரை வழிபாடு செய்யும்போது நமக்கு கிடைக்கும் கூடிய பலனானது இரட்டிப்பாக இருக்கும்.
அந்தவகையில், மாதந்தோறும் வரக்கூடிய விசாக நட்சத்திரத்தன்று வீட்டு பக்கத்தில் இருக்கக்கூடிய முருகப்பெருமான் கோவிலுக்கு செல்ல வேண்டும்.
முருகனுக்கு நெய்வேதியம், பூ, பழம், தேங்காய் வைத்து பெயரைச் சொல்லி அர்ச்சனை செய்து, முருகரை வழிபட்டால் உங்கள் வேண்டுதலானது அடுத்த விசாக நட்சத்திரத்திற்குள் நிறைவேறும் என்பது நம்பிக்கையாக சொல்லப்பட்டுள்ளது.
யாரேனும் தெரிந்தவர்கள் விசாக நட்சத்திரத்தில் பிறந்திருந்தால் நீங்கள் பணம்கொடுத்து அவருடைய கையால் முருகரின் திரு உருவப்படம், முருகர் வேல், முருகர் சிலை ஏதாவது ஒன்றை வாங்கி தரச் சொல்லுங்கள்.
அவற்றை வீட்டின் பூஜை அறையில் வைத்து தினமும் வழிபாடு செய்தால் வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்களை எல்லாம் நொடிப்பொழுதில் தீர்ந்துபோய்விடும்.
முடிந்தவர்கள் விசாக நட்சத்திரத்தன்று அன்னதானத்தை செய்யுங்கள். அந்த புண்ணியம் ஏழேழு ஜென்மத்திற்கும் போய் சேரும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |