இந்த தேதியில் பிறந்தவர்களுக்கு சிவபெருமானின் அருள் எப்பொழுதும் இருக்குமாம்
நம்முடைய கர்ம வினைகளை பாவங்களை அடியோடு அழிக்கக்கூடிய வல்லமை பெற்றவர் சிவபெருமான். ஒருவர் சிவனை சரண் அடைகிறார்கள் என்றால் அவருடைய பார்வை பட்டால் மட்டுமே அது சாத்தியமாகும்.
அந்த வகையில் நாம் வாழ்க்கையில் 108 சிவாலய தரிசனம் செய்யும் பொழுது நம் குடும்பத்தில் ஐந்து தலைமுறை வம்சம் விருட்சமாக்கி சுபிட்சமாக வாழ வைக்கும். அது மட்டுமல்லாமல் இவை பிறவி பலனை அடைவதற்கான சமமாக கருதப்படுகிறது. அதைப்போல் ஒரு சில ஜாதகத்தில் எண் 3, 6, 4, 7 தொடர்புடையவர்கள் சிவாலயம் செல்கின்ற பொழுது சில தடைகள் வரலாம்.
அவர்கள் முதலில் அம்மன் ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்த பிறகு சிவன் ஆலயத்திற்கு சென்று வழிபடலாம். அதேபோல் எந்த ஒரு வழிபாட்டை தொடங்குவதற்கு முன்பாகவும் பிள்ளையார் சுழி போட்டு விநாயகரை வழிபாடு செய்த பிறகு நாம் அதனை துவங்க வேண்டும்.
ஒருவர் வாழ்க்கையில் முக்தி அடைய வேண்டும் மிகப்பெரிய அளவில் சிவபெருமானுடைய அருளை பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் 108 என்கின்ற கணக்கிற்குள் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவாலயங்களை தரிசிப்பது மிகப்பெரிய சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது.
சென்னையில் என்று எடுத்துக் கொண்டால் அங்கு குருங்காலேஸ்வரர், வேங்கீஸ்வரர், பரதீஸ்வரர் போன்ற பழமையான கோயில்களை தரிசிக்கலாம். இவ்வாறு ஒவ்வொரு ஊர்களில் இருக்கக்கூடிய சிவன் ஆலயத்தில் சென்று நாம் தரிசனம் செய்யலாம்.
அதைப்போல் 108 சிவாலயங்களை தரிசனம் செய்பவர்களுக்கு சித்தர்களைப் போன்று உள் உணர்வு அதிகம் கிடைப்பதை நாம் பார்க்க முடிகிறது. மேலும், சிவன் ஆலயத்திற்கு செல்லும் பொழுது என்னென்ன விஷயங்களை கடைப்பிடிக்க வேண்டும் என்பதை பற்றி இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்,
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |