நாம் ஏன் கோயிலுக்கு செல்ல வேண்டும்? சுவாமி விவேகானந்தர் சொன்ன பதில்
ஆன்மீகம் என்பது கடல் போன்று. கடலில் வரும் பல அலைகள் போல் மனதில் பல கேள்விகள் எழும்பி குழப்பம் கொண்டு பின் அதற்கான பதில் கிடைத்து மனம் அமைதி பெரும்.
அப்படி இருக்க ஒருமுறை ஸ்வாமி விவேகானந்தர் சொற்பொழிவு ஆற்றி கொண்டு இருந்தார். அப்பொழுது அங்கு வந்திருந்த ஒருவருக்கு ஒரு கேள்வி எழும்பியது.
உடனே அவர் விவேகானந்தரிடம் நாம் ஏன் கடவுளை கோயிலுக்கு சென்று தரிசிக்க வேண்டும் என்று கேட்டார்.
விவேகானந்தர் சரி, எனக்கு தாகமாக உள்ளது கொஞ்சம் தண்ணீர் எடுத்து வர முடியுமா? என்று கேட்க அருகில் இருந்தவர், வேகமாக ஓடி சென்று ஒரு செம்பில் தண்ணீர் எடுத்து வந்தார்.
தண்ணீர் குடித்து விட்டு விவேகானந்தர் சொன்னார், நான் குடிக்க தண்ணீர் மட்டும் தானே கேட்டேன் அதை மட்டும் எடுத்து வராமல், செம்பு எதற்கு கொண்டு வந்தீர்கள் என் கேட்க, அவரும் சுவாமி! தண்ணீர் மட்டும் எப்படி எடுத்து வர முடியும் என்று சொன்னார்.
உடனே விவேகானந்தர் பிடித்து கொண்டு, ஆம் பாருங்கள் அதே போல் தான் நீங்கள் கேட்ட கேள்விக்கான பதிலும் கடவுளை உணர்ந்து கொள்ள கோயில் கண்டிப்பாக தேவை. அங்கு சென்றால் மனம் தூய்மை ஆகும் என்றார்.
சமயங்கள் பொறுத்த வரைக்கும் ஒவ்வொரு விஷயமும் இப்படித்தான் செய்யவேண்டும் என்ற விதிகள் உள்ளது. அப்படி செய்தால் நன்மை உண்டாகும்.
சிலர் சொல்லி கேள்வி பட்டு இருப்போம், நான் கோயிலுக்கு எல்லாம் போகமாட்டேன் கடவுளை மனதில் நினைத்து கொள்வேன் என்று, அவர்களுக்கான பதிலாகவும் சுவாமி சொன்ன பதில் இருக்கும்.
உண்மையில் வாரம் ஒருமுறை, இல்லை மாதம் ஒருமுறை கோயில் வாசலை கடந்து சென்று பார்த்தாலே மனதில் ஏதோ அமைதி பிறக்கும்.
அப்படி இருக்க நாம் கோயில் உள் சென்று இறைவனை தரிசிக்க மனம் எவ்வளவு மாற்றம் கொள்ளும் என்பதை உணரலாம். வாழ்க்கையில் இறைவழிபாடு என்பது மிக முக்கியமான ஒன்றாகும்.